குற்ற செய்திகள்
Crime News · 47 செய்திகள்
குற்றம்🔴 திருவொற்றியூர் பிரதீப் கொலை: காவல் ஆய்வாளர் மிரட்டல், ரவுடி-போலீஸ் கூட்டணி - ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!
"பொய் வழக்கு போட்டு வெட்டி திருச்செந்தூர் கடலில் வீசிவிடுவேன்" - உயிருக்கு பாதுகாப்பு கேட்ட இளைஞர் பேட்டி அளித்த மறுநாளே படுகொலை; எஸ்பி லாவண்யா மீது ₹20 கோடி ஊழல் புகார்!
குற்றம்🔴 திருவொற்றியூர் அதிர்ச்சி: திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட 4 பேர் கைது - காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக்கொலை!
"கந்துவட்டி தகராறு முதல் காவல் ஆய்வாளர் மிரட்டல் வரை" - பிரதீப் ராஜ் படுகொலை;கொலை செய்தவர் திமுகவை சார்ந்தவர் என தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்; சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி!
குற்றம்🔴 சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக் கொலை - உதயநிதி கடும் விமர்சனம்
"சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக தவெக உள்ளது" - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
குற்றம்🔴 'இந்தியாவின் எப்ஸ்டீன்' ஜெம் வீரமணி: 84 வயது கோடீஸ்வரரின் வீழ்ச்சி - பாலியல் வன்கொடுமை வீடியோ ஆதாரம்; காவல்துறை மூட முயன்ற வழக்கை நீதிமன்றம் மீட்டெடுத்தது எப்படி?
"தேனாம்பேட்டை பங்களாவில் 12 வயது சிறுமிகளை வேட்டையாடிய மிருகம்; ₹10 கோடி லஞ்சம், 11 மாத காலதாமதம், 'Closure Report' - ஆனால் நீதிபதி பத்மாவின் சம்மட்டியடியில் உடைந்த சதி; புதிய காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடியில் கைது; 'என்கிட்ட கோடிக்கணக்கான ரூபாய் இருக்கு, என்னை விட்டுருங்க' - கைது செய்யப்பட்ட போதும் பணத்திமிரில் பேசிய வீரமணி; வருமான வரித்துறை ரூ.100 கோடி சொத்து விற்பனை விசாரணை; பாதிக்கப்பட்ட சிறுமிகள் இன்னும் கண்டறியப்படவில்லை - தவெக அரசின் முக்கிய கடமை!"
குற்றம்ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ வழக்கு: தப்பிய குற்றவாளியும் காப்பாற்றிய முந்தைய திமுக அதிகாரங்களும்!
பணபலமும் அதிகார பலமும் இருந்தால் எந்தக் கொடூரத்திலிருந்தும் தப்பித்துவிடலாம் என்பதற்கு ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கே ஆகச்சிறந்த உதாரணம். 13 மற்றும் 15 வயது சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்ய ஒரு பிரத்யேக பங்களாவையே பயன்படுத்திய அந்த மிருகத்திற்கு முந்தைய அரசு சிவப்புக் கம்பளம் விரித்துக் காப்பாற்றியது.
குற்றம்🔴 "வேலியே பயிரை மேய்ந்தால் நீதியை எங்கே தேடுவது?" - போக்சோ வழக்குகளில் காவல்துறையின் கூட்டுச்சதி; ராமநாதபுரம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் வழக்குகள் அம்பலம்!
"84 நாட்கள் குற்றவாளியை கைது செய்யாமல் தாமதம்; 5 வயது சிறுமி மரண வழக்கில் 20 லட்சம் இழப்பீட்டில் வழக்கு மூட முயற்சி; பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரையே தாக்கிய பெண் ஆய்வாளர்" - காவல்துறையின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் 3 அதிர்ச்சி வழக்குகள்; கருப்பு எழுத்துக் கழகத்தின் கடுமையான கேள்விகள்!
குற்றம்🔴 தஞ்சை அதிராம்பட்டினத்தில் 12ம் வகுப்பு சிறுமிகள் பாலியல் தொல்லை - 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது!
"தாத்தா வயதில் டீக்கடை நடத்துபவர், 16 வயது சிறுமிகளுக்கு இரட்டை அர்த்த பேச்சில் தொல்லை" - பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் புகார்; போலீசார் விரைந்து நடவடிக்கை; சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட முதியவர்!
குற்றம்ரூ.1,000 கோடியைச் சுருட்டிய கும்பல் - 18 பேர் அதிரடி கைது! பணத்தை இழந்து திண்டுக்கல் இளைஞர் தற்கொலை. வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்
மதுரை FQL மெகா மோசடி: ரூ.1,000 கோடியைச் சுருட்டிய கும்பல் - 18 பேர் அதிரடி கைது! பணத்தை இழந்து திண்டுக்கல் விவசாயி தற்கொலை; 34,000 புகார்கள் குவிந்ததால் தமிழகமே அதிர்ச்சி!
குற்றம்கடத்தல், கொடூர தாக்குதல், பணப் பகை காரணமா? பாய்ந்தது குண்டர்சட்டம்!
🔴 திருப்புல்லாணி இரவு பயங்கரம்: 7 நபர்கள் குண்டர் சட்டதில் கைது ! - கடத்தல், கொடூர தாக்குதல், பணப் பகை! "வேத நஸ்ருத்தீனை காரில் இழுத்துச் சென்று, கட்டிப்போட்டு, கண்ணையும் தலையையும் பிழிந்த ராட்சசர்கள் - நபில், நொபல், ரக்கீப்... 7 பேர் பிணை மறுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறை!"
குற்றம்🔴 FQL Trading Wallet மோசடி: 12 பேர் கைது; பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க வசதி - மதுரை காவல்துறை அதிரடி!
"45 நாட்களில் பணம் இரட்டிப்பு" - போலி கிரிப்டோ தளம் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய கும்பல்; வங்கிக் கணக்குகள் முடக்கம் - புகார் அளிக்க இலவச உதவி எண் 1930!
குற்றம்FQL மோசடி வெள்ளைக்காரர்களிடம் பணத்தை இழந்த இந்தியர்கள் உடந்தையாக லட்சக்கணக்கான தமிழக ஏஜெண்டுகள்!
₹15,000 கோடி கிரிப்டோ கொள்ளை: அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ரிச்சர்ட் சோரோஸின் மாய வலை - தமிழக கிராமங்களின் கண்ணீர்! "பணம் இரட்டிப்பாகும்" என்ற ஆசை வார்த்தையில் மேலூர், ஒத்தக்கடை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிப்பு; 1,367 பிட்காயின் பாதுகாப்பு சாக்கில் மோசடி - தாலிச் செயின் விற்று முதலீடு செய்த பெண்கள் இன்று வீதிக்கு வந்த நிலை; ரிச்சர்ட் சோரோஸ் மீது இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை!
குற்றம்வங்கி அதிகாரிகளின் கூட்டுச்சதி: ₹252 கோடி சொத்தை ₹45.60 கோடிக்கு தாரைவார்த்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எஸ்ஆர்எம் மோசடி பின்னணி!
"கடனை வசூலிப்பதை விட சொத்தை கையகப்படுத்துவதிலேயே தீவிரம்" - ₹48 கோடி கடனுக்கு ₹252 கோடி மதிப்புள்ள இயங்கும் கல்லூரி வளாகத்தை வெறும் ₹45.60 கோடிக்கு விற்ற வங்கி அதிகாரிகள்; நீதிபதி இளந்திரையன் கண்டனம் - "குற்றவாளிகளே தங்களை விசாரித்துக் கொள்ள அனுமதிக்க முடியாது"!