🔴
•1923 தீர்ப்பை மீறியா? உச்சநீதிமன்றம் விதித்த தடை – திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றார்கள்?•🔴 மருத்துவக் காப்பீட்டு மோசடி: ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - IRDAI அதிரடி உத்தரவு!•🔴 ரூ.5,000 கோடி மோசடி: 'அன்பிலுக்குப் பின் வேலு' கார்ட்டூன் - ஜூனியர் விகடனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!•🔴 பாலியல் புகார் மற்றும் தற்கொலை முயற்சி: காரைக்கால் எஸ்பி சுப்பிரமணியன் பணி நீக்கம்! உயர் நீதிமன்றத் தலையீட்டை அடுத்து அதிரடி உத்தரவு!•🔴 "லஞ்சம் கேட்பது அரசுப் பணியல்ல!" – ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு முன் அனுமதி தேவையில்லை: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!•நீதியைத் தேடிய கதைகள் | கலங்கரை விளக்கம் கல்யாணி | பேராசிரியர் கல்யாணி வழக்கு•“மீனாட்சிக்கும் என் தந்தைக்கும் கொள்ளையில் தொடர்பில்லை!” – மதுரை ₹15 கோடி நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்த் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்; 5 நாள் கேட்ட போலீசுக்கு ஒருநாள் காவல் மட்டுமே!•கட்டுப்பாடுகளை இழந்த காவல்துறை: "திமுக சாரியாவது சொன்னது; நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" — தவெக அரசின் மீது சவுக்கு சங்கர் முன்வைக்கும் அனல் பறக்கும் புலனாய்வுக் குற்றச்சாட்டுகள்•பாதிக்கப்பட்டோருக்கு நீதி! படகு உரிமையாளருக்கும் நீதி!! வரலாற்றில் ஒரு மனிதநேயத் தீர்ப்பு!•🔴 இணையதள டெண்டர் முறையிலிருந்து பின்வாங்கும் தமிழக அரசு: 50 லட்சத்திற்கு கீழ் 'ஆஃப்லைன்' கொட்டேஷன் அனுமதி - ஊழலுக்கு வழிவகுக்குமா?•1923 தீர்ப்பை மீறியா? உச்சநீதிமன்றம் விதித்த தடை – திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றார்கள்?•🔴 மருத்துவக் காப்பீட்டு மோசடி: ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - IRDAI அதிரடி உத்தரவு!•🔴 ரூ.5,000 கோடி மோசடி: 'அன்பிலுக்குப் பின் வேலு' கார்ட்டூன் - ஜூனியர் விகடனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!•🔴 பாலியல் புகார் மற்றும் தற்கொலை முயற்சி: காரைக்கால் எஸ்பி சுப்பிரமணியன் பணி நீக்கம்! உயர் நீதிமன்றத் தலையீட்டை அடுத்து அதிரடி உத்தரவு!•🔴 "லஞ்சம் கேட்பது அரசுப் பணியல்ல!" – ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு முன் அனுமதி தேவையில்லை: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!•நீதியைத் தேடிய கதைகள் | கலங்கரை விளக்கம் கல்யாணி | பேராசிரியர் கல்யாணி வழக்கு•“மீனாட்சிக்கும் என் தந்தைக்கும் கொள்ளையில் தொடர்பில்லை!” – மதுரை ₹15 கோடி நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்த் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்; 5 நாள் கேட்ட போலீசுக்கு ஒருநாள் காவல் மட்டுமே!•கட்டுப்பாடுகளை இழந்த காவல்துறை: "திமுக சாரியாவது சொன்னது; நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" — தவெக அரசின் மீது சவுக்கு சங்கர் முன்வைக்கும் அனல் பறக்கும் புலனாய்வுக் குற்றச்சாட்டுகள்•பாதிக்கப்பட்டோருக்கு நீதி! படகு உரிமையாளருக்கும் நீதி!! வரலாற்றில் ஒரு மனிதநேயத் தீர்ப்பு!•🔴 இணையதள டெண்டர் முறையிலிருந்து பின்வாங்கும் தமிழக அரசு: 50 லட்சத்திற்கு கீழ் 'ஆஃப்லைன்' கொட்டேஷன் அனுமதி - ஊழலுக்கு வழிவகுக்குமா?
KARUPPU NEWS
பாதிக்கப்பட்டோருக்கு நீதி! படகு உரிமையாளருக்கும் நீதி!! வரலாற்றில் ஒரு மனிதநேயத் தீர்ப்பு!
வழக்குகள்LIVE

பாதிக்கப்பட்டோருக்கு நீதி! படகு உரிமையாளருக்கும் நீதி!! வரலாற்றில் ஒரு மனிதநேயத் தீர்ப்பு!

இயற்கைச் சீற்றத்தால் நிகழ்ந்த ஒரு பேரழிவில், குற்றவாளியைத் தேடுவதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். 'அறிவுத் தலை மட்டுமல்லாது, இரக்கமுள்ள இதயமும்' கொண்ட நீதி என மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணா ஐயரின் வழிகாட்டுதலை நினைவூட்டும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

Published

18 Nov 2026

4 நாட்களுக்கு முன்பு

Updated

18 Nov 2026

3 நிமிடம்Editorial Policy
0

சென்னை, நவம்பர் 18 –நீதிமன்றத் தீர்ப்புகள் வெறும் சட்டப் பிரிவுகளின் வறட்டு முடிவுகளாக இல்லாமல், மனித உணர்வுகளையும் மனிதாபிமானத்தையும் உள்ளடக்கியதாக—அதாவது "அறிவுத் தலை மட்டுமல்லாது, இரக்கமுள்ள இதயத்தையும்" கொண்டதாக விளங்க வேண்டும் என்ற மறைந்த மாமேதை நீதிபதி வி. ஆர். கிருஷ்ணஐயரின் நீதித்துறை வழிகாட்டுதலுக்கு உயிரூட்டும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மாமேதை நீதிபதி வி. ஆர். கிருஷ்ணஐயர்

வங்கக் கடலில் ஏற்பட்ட கொடூரமான புயலில் சிக்கி 9 மீனவர்கள் உயிரிழந்த சோக வழக்கில், பாதிக்கப்பட்ட ஏழை மீனவக் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து நீதியளித்த அதே வேளையில், தற்செயலான இயற்கைச் சீற்றத்தில் சிக்கித் தவித்த படகு உரிமையாளருக்கும் உரிய பாதுகாப்பையும் நீதியையும் வழங்கி மாண்புமிகு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் பிறப்பித்துள்ள உத்தரவு அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்துள்ளது.


சோகத்தில் முடிந்த மீன்பிடிப் பயணம்:

ராயபுரத்தைச் சேர்ந்த செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான IND-TN-02-MM-2584 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில், கேப்டன் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் கடந்த 2026 அக்டோபர் 29 அன்று காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றனர். அப்போது உருவான ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ புயல்களின் கோரத் தாண்டவத்தால், ஆந்திர மாநில எல்லைப் பகுதியான நிசாம்பட்டினம் – ராமாயப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு மூழ்கிப் பெரும் விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்த 9 மீனவர்களும் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேப்டன் சூர்யாவின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில், மீன்பிடித் துறைமுகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அதனைப் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 106 உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் மாற்றினர். இதனால் படகு உரிமையாளர் செல்வரழகன் கைது செய்யப்படக்கூடிய அபாயம் எழுந்தது.


“படகுகளை மீண்டும் உருவாக்கலாம்; மனித உயிர்களை மீட்க முடியாது!” — உரிமையாளரின் நெகிழ்ச்சி:

கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்புக் கோரி செல்வழகன் தாக்கல் செய்த ரிட் மனுவை (WP.Crl.No. 2994 of 2026) விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இது ஒரு இயற்கைச் சீற்றம் என்பதைக் கருத்தில் கொண்டு, 2026 நவம்பர் 5 அன்று செல்வழகனைக் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்றும், அவர் மீதான நீதிமன்றக் காவல் (remand) நடவடிக்கைகளை ஒத்திவைத்தும் முதற்கட்ட நிவாரணம் வழங்கினார்.

அதே நேரத்தில், உரிமையாளர் செல்வழகன் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், “எனது படகு மூழ்கியதை மீட்டெடுக்கவோ அல்லது புதிதாக வேறொரு படகை உருவாக்கிவிடவோ முடியும்; ஆனால் எனது கேப்டனையும் ஊழியர்களையும் என்னால் மீண்டும் உயிர்ப்பித்துத் தர முடியாது. மனித உயிர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று” என்று தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த மீனவர்களின் இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தி, தலா ரூ. 50,000 வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களுக்கும் தலா ரூ. 1,50,000 வீதம் மீதி இழப்பீட்டு காசோலைகளையும் (மொத்தமாக தலா ரூ. 2 லட்சம்) தனது வழக்கறிஞரான ப. விஜேந்திரன் அவர்களிடம் ஒப்படைத்துத் தனது பொறுப்புணர்வை வெளிப்படுத்தினார்.


தானாக முன்வந்து குடும்பங்களை இணைத்த நீதிமன்றம்:

நீதிபதி வி. லட்சுமி நாராயணன்

2026 நவம்பர் 16 அன்று நடைபெற்ற விசாரணையின்போது, உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களையும் (எதிர்மனுதாரர்கள் 2 முதல் 10 வரை) நீதிமன்றம் தனது சொந்த அதிகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைத்து, அவர்களை நேரடியாக நீதிமன்றத்திற்கு வரவழைத்தது.

அப்போது, அரசு இழப்பீடு வழங்கியுள்ளதால் படகு உரிமையாளர் தர வேண்டிய தொகையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், “அரசு வழங்கும் நிதி என்பது குடும்பங்கள் துயரத்திலிருந்து மீள வழங்கப்படும் கருணைத்தொகை மட்டுமே; ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்கி இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தீர்வு காண வேண்டிய முதன்மைப் பொறுப்பு படகு உரிமையாளருக்கே உரியது” என்று அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

உரிமையாளர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க முன்வந்ததால், தங்களின் புகாரைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக உயிரிழந்த மீனவர்களின் வாரிசுகளும் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் மனநிறைவோடு தெரிவித்தனர்.


வரலாற்றில் நீடிக்கும் மனிதநேயப் பாடம்:

இயற்கைச் சீற்றத்தால் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவத்தில், படகு உரிமையாளரை வெறுமனே சிறையில் தள்ளிப் பழிவாங்கும் இயந்திரத்தனமான அணுகுமுறையை விடுத்து:

  1. பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உடனடிப் பொருளாதாரத் தீர்வும் நீதியும் பெற்றுத் தந்தது,

  2. தவறிழைக்காத படகு உரிமையாளரின் நற்பெயரையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தது

—ஆகிய இரண்டையும் ஒரே தராசில் வைத்து நேர்த்தியாக எடைபோட்டுத் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி வி. லட்சுமி நாராயணன்.

நீதிமன்றங்கள் வறண்ட சட்டப் புத்தகங்களின் வழித்தடங்கள் மட்டுமல்ல; அவை ரத்தமும் சதையுமான மனிதர்களின் காயங்களுக்கு மருந்திடும் மனிதநேயக் கூடங்கள் என்பதை இத்தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.

FOLLOW NOW

website : https://news.karuppu.in/
X (Twitter): https://x.com/karuppuTv
Facebook: https://www.facebook.com/karuppuezhutthu
Whatsapp : https://whatsapp.com/channel/0029Vb85Sj9CcW4sZ5D8qf37

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG