🔴
•1923 தீர்ப்பை மீறியா? உச்சநீதிமன்றம் விதித்த தடை – திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றார்கள்?•🔴 மருத்துவக் காப்பீட்டு மோசடி: ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - IRDAI அதிரடி உத்தரவு!•🔴 ரூ.5,000 கோடி மோசடி: 'அன்பிலுக்குப் பின் வேலு' கார்ட்டூன் - ஜூனியர் விகடனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!•🔴 பாலியல் புகார் மற்றும் தற்கொலை முயற்சி: காரைக்கால் எஸ்பி சுப்பிரமணியன் பணி நீக்கம்! உயர் நீதிமன்றத் தலையீட்டை அடுத்து அதிரடி உத்தரவு!•🔴 "லஞ்சம் கேட்பது அரசுப் பணியல்ல!" – ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு முன் அனுமதி தேவையில்லை: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!•நீதியைத் தேடிய கதைகள் | கலங்கரை விளக்கம் கல்யாணி | பேராசிரியர் கல்யாணி வழக்கு•“மீனாட்சிக்கும் என் தந்தைக்கும் கொள்ளையில் தொடர்பில்லை!” – மதுரை ₹15 கோடி நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்த் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்; 5 நாள் கேட்ட போலீசுக்கு ஒருநாள் காவல் மட்டுமே!•கட்டுப்பாடுகளை இழந்த காவல்துறை: "திமுக சாரியாவது சொன்னது; நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" — தவெக அரசின் மீது சவுக்கு சங்கர் முன்வைக்கும் அனல் பறக்கும் புலனாய்வுக் குற்றச்சாட்டுகள்•பாதிக்கப்பட்டோருக்கு நீதி! படகு உரிமையாளருக்கும் நீதி!! வரலாற்றில் ஒரு மனிதநேயத் தீர்ப்பு!•🔴 இணையதள டெண்டர் முறையிலிருந்து பின்வாங்கும் தமிழக அரசு: 50 லட்சத்திற்கு கீழ் 'ஆஃப்லைன்' கொட்டேஷன் அனுமதி - ஊழலுக்கு வழிவகுக்குமா?•1923 தீர்ப்பை மீறியா? உச்சநீதிமன்றம் விதித்த தடை – திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றார்கள்?•🔴 மருத்துவக் காப்பீட்டு மோசடி: ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - IRDAI அதிரடி உத்தரவு!•🔴 ரூ.5,000 கோடி மோசடி: 'அன்பிலுக்குப் பின் வேலு' கார்ட்டூன் - ஜூனியர் விகடனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!•🔴 பாலியல் புகார் மற்றும் தற்கொலை முயற்சி: காரைக்கால் எஸ்பி சுப்பிரமணியன் பணி நீக்கம்! உயர் நீதிமன்றத் தலையீட்டை அடுத்து அதிரடி உத்தரவு!•🔴 "லஞ்சம் கேட்பது அரசுப் பணியல்ல!" – ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு முன் அனுமதி தேவையில்லை: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!•நீதியைத் தேடிய கதைகள் | கலங்கரை விளக்கம் கல்யாணி | பேராசிரியர் கல்யாணி வழக்கு•“மீனாட்சிக்கும் என் தந்தைக்கும் கொள்ளையில் தொடர்பில்லை!” – மதுரை ₹15 கோடி நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்த் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்; 5 நாள் கேட்ட போலீசுக்கு ஒருநாள் காவல் மட்டுமே!•கட்டுப்பாடுகளை இழந்த காவல்துறை: "திமுக சாரியாவது சொன்னது; நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" — தவெக அரசின் மீது சவுக்கு சங்கர் முன்வைக்கும் அனல் பறக்கும் புலனாய்வுக் குற்றச்சாட்டுகள்•பாதிக்கப்பட்டோருக்கு நீதி! படகு உரிமையாளருக்கும் நீதி!! வரலாற்றில் ஒரு மனிதநேயத் தீர்ப்பு!•🔴 இணையதள டெண்டர் முறையிலிருந்து பின்வாங்கும் தமிழக அரசு: 50 லட்சத்திற்கு கீழ் 'ஆஃப்லைன்' கொட்டேஷன் அனுமதி - ஊழலுக்கு வழிவகுக்குமா?
KARUPPU NEWS
நீதியைத் தேடிய கதைகள் |  கலங்கரை விளக்கம் கல்யாணி | பேராசிரியர் கல்யாணி வழக்கு
EDUCATIONLIVE

நீதியைத் தேடிய கதைகள் | கலங்கரை விளக்கம் கல்யாணி | பேராசிரியர் கல்யாணி வழக்கு

இருளர் மக்களுக்காக உழைத்த பேராசிரியருக்கு எதிரான பொய் வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பின் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது! சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு சமூக சேவகரை முடக்க முயன்ற சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முயன்றதற்காகவே பொய்யான வழக்கில் சிக்கிய பேராசிரியர் கல்யாணி.

Published

20 Nov 2026

2 நாட்களுக்கு முன்பு

Updated

20 Nov 2026

3 நிமிடம்Editorial Policy
0

Introduction & Academic Legacy / அறிமுகமும் கல்விப் பணியும்:

பேராசிரியர் கல்யாணி ஒரு இயற்பியல் பேராசிரியர். இயற்பியல் பாடம் படிப்பவர்கள் இயற்கையிலே நுண்ணறிவும் மனித குல வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த பணியை செய்துக்கொண்டே இருப்பார்கள். அதற்கு மிகபெரிய உதாரணம் 1995-யில் ஐன்ஸ்டீன் கண்டு பிடித்த பொருண்மை ஆற்றல் சமன்பாடு $\{E=MC^{2}\}$, தாமஸ் ஆல்வா எடிசன் கண்டு பிடித்த மின்னொளிரும் விளக்குகள் (Electric Bulb), ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த வானூர்தி அதன் தொடர்ச்சியாக பல விஞ்ஞானிகள் பல இயற்பியல் கண்டு பிடிப்புகளை மனித குலத்திற்கு அளித்து நவ நாகரிக சமுகத்தை உருவாகியுள்ளனர். ஆனால் இயற்பியல் அறிவுற்ற ஒரு சிலர் நாசகர வேலைகளையும் செய்துவருகின்றனர் நமது நாயகனோ இயற்பியலே வியப்புடன் பார்க்கும் வரிசையில் நேரடியாக மனித குலத்திற்கு தன் வாழ்வை அற்பணித்து கொண்டவர் தான் இவர்.

கல்லூரியில் இயற்பியியல் வகுப்பு எடுக்கும் பொழுது கடினமான இயற்பியல் பாடத்தை மாணவர்களுக்கு தேனூர செய்தவர். எனவே, மாணவர்கள் பேராசிரியர் கல்யாணி வகுப்பு என்றால் தேன்சிந்தும் மலர்களை நாடும் வண்டுகளை போல் மாணவர்கள் குவிந்து விடுவார்களாம். இயற்பியல் மட்டும் அல்லாமல் மாணவர்களின் இயல்பான திறனையும் தட்டி எழுப்புவார். இந்த கல்வி பணி சுமார் 28 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி இறுதியில் 07.03.1997 அன்று விருப்ப ஓய்வைப் [Voluntary Retirement] பெற்றுக் கொண்டார்.

பேராசிரியர் கல்யாணி

Law of Conservation of Energy in Social Service / சமூகப் பணியில் ஆற்றல் அழிவின்மை விதி:

ஆற்றல் ஆக்கப் படுவதுமில்லை அழிக்கப் படுவதுமில்லை மாறாக அது ஒரு வகையில் மறைந்து மற்றொரு வகையில் வெளிப்படும். இதற்கு இயற்பியலில் "ஆற்றல் அழிவின்மை விதி" என்று பெயர். பேராசிரியரும் அதற்கு இலக்கணமாய் மாற்றிவிட்டார். ஏனென்றால், விருப்ப ஓய்வு பெற்ற பலர் சம்பாதிப்பதையும் மனம் வெறுத்து ஓதுங்குவதையும் நம் சமுகத்தில் நடைபெறும் ஒரு போக்கு. ஆனால், இவர் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களுக்கு எதிராக அணிவகுக்கும் சமுக மற்றும் அரசு வன்முறைக்கு எதிராகவும் சட்டரீதியாகவும் ஜனநாயக முறையிலும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த அங்கக உணர்வோடு இன்றும் உழைப்பவர்.

இவர் மீது தான் பட்டியல் மற்றும் பழங்குடியினர் (வன்முறை தடுப்புச்) சட்டம், 1984-ன் கீழ் 03.12.2011 அன்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கை எண்.908/2011-யை பதிவு செய்தனர். இதுவொன்றும் புதிதல்லவே!. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த பகத்சிங்கையும், சுக்தேவ்-யும், ராஜ குருவையும், வ.உ.சிதம்பரனாரையும் கலகக்காரர்கள் என்றும் தேச துரோகிகள் என்றும் முத்திரை குத்தினார்கள். ஆனால், அவர்களை இப்பொழுது தேச பக்தர்கள் என்று கொண்டாடுகிறோம். அப்படி தான் தற்போது நிலவுகின்ற நவீன அறிவியல் சமுகத்தில் எந்தவொரு பலனையும் அனுபவிக்காமல் இருளர்கள் என்ற இனக் குழு ஒன்று உள்ளது.

பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்தினரின் புகைப்படம்

அவர்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமுக மேன்பாட்டிற்காக தனது வாழ்க்கையையே அற்பணித்துக் கொண்டிருப்பவர் தான் பேராசிரியர் கல்யாணி. இந்த சூழலில்தான் 22.11.2011 அன்று திருக்கோவிலூர் காவல் நிலைத்தினர் நான்கு இருளர் பெண்களை பாலியில் பலாத்காரம் செய்து விட்டனர். இதனை அறிந்த பேராசிரியர் இருளர் சங்கத்தின் சார்பில் 26.11.2011 அன்று விழுப்புரம் மாவட்டம், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் விசாரணையென்ற பெயரில் அந்த பெண்களை திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் மிரட்டி கொடுத்த புகாரை திரும்ப பெற கட்டாயப்படுத்தினர். மேலும், அந்த பெண்களை உரிய மருத்துவ பரிசோதனை செய்யாமல் டி.கே. திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை என்கின்ற பெயரில் மறைமுகமாக அவர்களை மிரட்டியுள்ளனர். ஆனால், இந்த நிலையில் அதே இருளர் சமுகத்தைச் சேர்ந்த திரு. தங்கமணி என்பவர் அவர்களை அழைத்து செல்வதுக்கு முற்பட்டார். ஆனால், அந்த பெண்கள் அவரோடு செல்வதற்கு மறுத்துவிட்டனர். மாறாக பேராசிரியர் கல்யாணியோடு செல்வது தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று கருதி அவரோடு செல்வதற்கு அணியமாயினர். இதை தங்கமணி தடுத்தார். எனவே, பேராசிரியர் கல்யாணி அவர்கள் எந்த பெண்களின் முடிவில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தினார். இதனால், கோவமடைந்த திரு. தங்கமணி அவரை பொதுயிடத்தில் சாதியை சொல்லி இழிவாக திட்டியதாகவும் சட்ட விரோதமாக அவர்களை மறுத்ததாகவும் பேராசிரியர் மீது பொய் புகார் ஒன்றினைக் கொடுத்தார். அதன் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் உடனடியாக மேற்கூறிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதில் இந்திய தண்டனை சட்டம்,1872 பிரிவுகள் 294-B,323,506 (2) மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் (வன்முறை தடுப்புச்) சட்டம், 1989 பிரிவு 3(1)(X) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

The 2011 Tirukoilur Incident & False Case / 2011 திருக்கோவிலூர் சம்பவமும் பொய் வழக்கும் :

ஓட்டுமொத்த சமூக மாற்றத்திற்காக ஊரே ஒன்று கூடி ஓரணியில் நின்றாலும் அதில் ஒருவர் மட்டும் கருப்பு ஆடாக மாறுவது தொண்டு தொட்டு நடந்துவரும் இச்சை செயல்களுள் ஒன்று. இப்படி நேர்மறைக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதும் காட்டிக்கொடுத்து விட்டு அதனால் வரும் சுகங்களை அனுபவிப்பதும் சமூக வரலாற்றின் பக்கங்களில் கருப்புக்கோடுகளாகவே கிளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளின் நீட்சியாகவே திரு. தங்கமணியை பார்க்க வேண்டும்.

ஆனால், இதே சம்பவத்திற்காக பேராசிரியர் பழங்குடி இருளர் சங்கத்தின் சார்பில் 02.12.2011 அன்றே புகாரினை சென்னையிலுள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்தார். ஆனால், அப்புகாரின் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் மு.த.அ.எண்.98/2011-யை பதிவு செய்தனர். மேலும். மு.த.அ.எண்.90/2011-யில் அதாவது தங்கமணி கொடுத்த புகாரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்து விட்டனர். ஆனால், தங்கமணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பிறந்த குழந்தையின் அம்மன நிலையிலேயே உள்ளது. இந்த செயலானது எப்படி காவல் துறையினர் நேர்மையற்ற பொய்யாளர்களுக்கு சார்பாகவும் மெய்யான பண்பாளர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.

Systemic Bias in Atrocity Cases / வன்கொடுமை வழக்குகளில் காவல்துறையின் பாரபட்சம் :

குறிப்பாகவே பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம், 1989-ன் கீழ் புகார்கள் ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்வதில்லை. இதனால், அவர்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குற்றங்களில் சுமார் 50% முதல் தகவல் அறிக்கைக்கு முன்பாகவே காவல் துறையினரே இந்த வழக்குகளை கருவிலேயே அழித்துவிடுகின்றனர். அதை தாண்டி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களை (Mistaken of fact) தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி அதை சிசுவிலேயே கொன்றுவிடுகின்றனர். இவற்றில் 20% வழக்குகள் இவ்வாறே அழிக்கப்படுகின்றன. மீதமுள்ள வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள தாமதம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதம் அப்படியே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும் கீழமை நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் வரை வழக்குகளை நேரிய முறையிலும் மனச்சாய்வில்லாமலும் விசாரிப்பது சற்று கடினமான செயல்பாடே ஆகும்.

The Legal Battle & Initial Hesitation / சட்டப் போராட்டமும் ஆரம்பகட்ட தயக்கமும்:

நீதிபதி திரு. K. சந்துரு

இந்த வழக்கினால், பேராசிரியரை பாராட்டி கன்னடா நாட்டு தமிழ் சங்கத்தினர் அந்நாட்டிற்கு அவரை அழைத்திருந்த பயணம் தடைப்பட்டது. அப்பொழுது தான் பேராசிரியர்க்கு பொரி தட்டுகிறது; ஏன் இந்த வழக்கை நீதிமன்றம் சென்று ரத்து செய்யக் கூடாது என்று? உடனே சென்னைக்கு விரைந்தார். எனவே அந்த மானசீக நண்பராகிய அப்பொழுது வழக்கறிஞர் தொழிலில் சாதாரண மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அவரே நீதிபதியாக இருந்த போது நீதிபதிகளுக்கு முன்மாதிரியாகவும் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி திரு. K. சந்துரு அவர்களை சந்தித்து தன்மீது போடப்பட்டிருந்த வன்கொடுமை வழக்கை எதிர்த்து இல்லாநிலையாக்கல் மனு (Petition for Quash) தாக்கல் செய்ய ஆலோசனை பெற்றுள்ளார். ஆனால், திரு. K. சந்துரு அவர்கள் எதிர்மறையாக ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கு காரணம் அவர் இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வழக்கறிஞராக இருந்த போதிலும் எந்த வழக்கும் நடத்தியதில்லை அதேபோன்று நீதிபதியாக இருந்த போதும் அவர்களுக்கு எதிராக எந்த தீர்ப்பும் வழங்கியதில்லை. மேலும், இப்படி தாக்கல் செய்தால் இது ஒரு முன்மாதிரியாக ஆகிவிடும் என்ற காரணத்தினால் கூட இருந்திருக்கலாம். இது என்னுடைய அனுமானமே தவிற அவருடைய எதிர்மறை ஆலோசனைக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. இந்த ஆலோசனையை கேட்டு அதிர்ந்தார் பேராசிரியர். ஏனென்றால், நண்பரே சொன்ன பிறகு அதற்கு மேல் நாட்டம் கொள்ளவில்லை. அவர் வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவரது அண்ணன் மகனும் என்னுடைய நண்பருமான வழக்கறிஞர் திரு. கல்யாணி என்னை அணுகினார்.

வழக்கறிஞர் திரு. கல்யாணி

நான் வழக்கு கோப்புகளைப் பார்த்து விட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை எண். 887/2011-ஐ ரத்து செய்ய வழக்கு தாக்கல் செய்யலாம் என்று ஆலோசணை வழங்கினேன். இந்த ஆலோசணையை பேராசிரியரின் மனம் ஏற்க மறுத்தது. என்னென்றால், "புலியே மறுத்த பிறகு; பூனை என்ன செய்ய போகிறது" என்று தயங்கினார். இது எனக்கு சிறிய நெருடலை ஏற்படுத்தினாலும் மனதிற்குள் சீரிப்பாயும் எண்ணத்தை உருவாக்கியது. எண்ணத்தை எழுத்தாக்கினேன்; எழுத்தை Crl.O.P.No. 14081/2016- என்ற வழக்காக்கினேன்; காரணம், பேராசிரியரின் மீதுள்ள அன்பும் அவர் இந்த சமுகத்திற்கு ஆற்றுகின்ற பேராற்றலுடைய அலுவல்களுக்கு மேலும் வலு சேற்க வேண்டுமென்ற வேட்க்கையுமே தவிர வேறொன்றும் இல்லை.

வெறும் வழக்காக அதாவது பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம், 1989-ஐ எதிர்த்து ரத்து செய்ய மனு தாக்கல் செய்தால் பெரும்பாலான நீதிபதிகள் வழக்கை ஏற்றுக் கொள்ள யோசிப்பார்கள். இதனால், நீதிபதிகள் அனைவரும் சமுக அக்கறை உடையவர்கள் என்று தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம்.

Judicial Mindset & Social Reality / நீதித்துறையின் மனநிலையும் சமூக யதார்த்தமும்:

பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம், 1989என்ற சட்டம் நீதிமன்றத்திற்கு வரும்பொழுது ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமான பொருண்மைகளை தங்கிவரும். ஆனால், நீதிபதிகளின் மனநிலை எப்பொழுதும் அதற்கு எதிராகவே செயல்படும். காரணம் நீதிபதிகள் ஒன்றும் ஆகாயத்திலிருந்து பறந்து வந்த பரமபிதாக்கள் அல்ல. மாறாக இந்த சமூகக் குட்டையில் ஊறிய மட்டைகளே! எனவே தான் இந்த சட்டத்தையே தீர்ந்துபோக செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் Dr. Subhash Kashinath Mahajan vs The State Of Maharashtra 2018 (6) SCC 454. https://indiankanoon.org/doc/108728085/ என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது. எனவே, இந்த தீர்ப்பை விமர்சித்து மிகப்புகழ் பெற்ற Economic and Political weekly (Volume-53, Issue 22 02, June, 2018)-ல் (Misuse of the Prevention of Atrocities Act) என்று இந்த சட்டத்தை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்றம் இந்த தீர்ப்பை நிராகரித்து இந்த சட்டத்திற்கு வழசேர்க்கும் வகையில் பிரிவு 18A என்ற பிரிவை சேர்த்து அது 20.08.2018 அன்று முதல் அமுழுக்கு வந்தது. இப்படி பாராளுமன்றமும் சட்டமன்றமும் சட்டங்கள் இயற்றி அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாலும் நீதிமன்றங்கள் தங்களுடைய அதிகாரத்தின் மூலம் அந்த நோக்கத்தை முறியடிக்கின்றன என்பதை நுணுக்கமாக படித்தறிந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இன்னும் ஆழ்ந்து குறிப்பிட்டு சொல்லப்போனால் எப்படி சூனியக்காரர்கள் சிரிப்பது போன்று அழுவதும் அழுவது போல் நடிப்பதுமாக செயல்படுகிறார்களோ அதே போன்று தான் இந்த வழக்குகள் வரும்பொழுது நீதிபதிகளும் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

வழக்கறிஞர் ப. விஜேந்திரன்

எனவே தான் வழக்கிற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் வெறும் சட்டம் சார்ந்த நுணுக்கங்களை மட்டும் கூறாமல் பேராசிரியரின் ஆற்றல் படைத்த ஆக்கங்களை ஆவணங்களாக அடுக்கினேன். அவற்றில் சில:

  1. கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இதனால், நீதிமன்றங்களால் கூட பிரச்சனையை இன்று வரை தீர்த்து வைக்க முடியவில்லை. ஆனால், காவேரி நீர் பிரச்சனையென்பது 2000 வருடத்தில் பிரச்சனை தலை விரித்து ஆடியது. இதனால், தஞ்சை நெற்கலஞ்சியம் தலை குனிந்து நின்றது. இதனால், கர்நாடகத்திலும் தமிழகத்திலும் சமுக கொந்தளிப்பு உருவாகியது. யாருடைய பேச்சையும் கேற்க கர்நாடகா அரசு மறுத்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமல்லவா! அப்படி ஒரு தசை ஆடியது. அதன் விளைவு கர்நாடகத்தின் முன்னனி நடிகரான திரு. ராஜ் குமாரை உரிமை போராளி திரு.வீரப்பன் அவர்கள் கட்டிற்குள் அழைத்து வந்து விட்டார். இதனால், இரண்டு மாநிலங்களிலும் சமுக கொதி நிலை இயல்பு நிலையைத் தாண்டியது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இந்த பிரச்சனைக்கு தீர்வுகான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியாக பழ. நெடுமாறன், பேராசிரியர். கல்யாணி மற்றும் நக்கீரன் கோபால் ஆகிய மூவர் கொண்ட தூது குழுவை திரு. வீரப்பனிடம் அனுப்பி வைத்தனர். அதற்கு இரண்டு மாநில அரசுகளும் நிபந்தனை விதித்து கடிதங்களை வெளியிட்டது. தமிழ் நாட்டின் ஓட்டுமொத்த உண்மை முகமான பேராசிரியர் திகழ்ந்தார்.

    தமிழ்நாடு அரசு உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் திருமதி. சாந்தா ஷீலா நாயர், இ.ஆ.ப. அவர்களின் கடிதம்: No.48/Secy/2000 Dt.9.10.2000.
    கர்நாடக அரசு உள்துறை மற்றும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கடிதம்: D.O. NO. HTD/PS/4067/2000, DATED 9-X-2000.
  1. 1950-யில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போதே சரத்து 17-யும் பின்னி பிணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் சாதிய பின்னல்களை இன்று வரை எடுக்க முடியவில்லை. எனவே, தான் பல்வேறு வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதையும் முறையாக அமல்படுத்த முடியவில்லை. எனவே, தமிழக அரசு 08.07.002 அன்று கடிதம் ஒன்றை வெளியிட்டு தமிழகத்தை மூன்று மண்டலமாக பிரித்து ஒவ்வொன்றிருக்கு ஓருங்கிணைப்பாளரையும் உறுப்பினர்களையும் நியமித்து ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகள் தற்பொழுது சமூக நீதித்துறை மீதான புரிதல் ஏற்படுதுதல் குறித்து விளக்க முகாம்களை நடத்தியது. அதில் திருநெல்வெலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் கன்னியாக்குமாரி ஆசிய மாவட்டங்களுக்கு பேராசிரியர் திரு. கல்யாணியை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் பேராசிரியர் கல்யாணியின் சமுகமுகம் பட்டொளி வீசிப் பாரெங்கும் பறந்தது.

இணைக்கப்பட்டுள்ள அரசு கடிதத்தின் விவரம்:

  • அனுப்புநர்: தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9. (திரு.ப.செல்வம், இ.ஆ.ப., அரசு செயலாளர்)

  • கடித எண்.12135/கொடுதடு2 / 2000 - 13 நாள் 8.7.2002.

  • பொருள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகள் மீதான புரிதல் ஏற்படுத்துதல் குறித்த விளக்க முகாம் தொடர்பாக.

  • குழு 1 (நீலகிரி, ஈரோடு, வேலூர், சேலம், கரூர், நாமக்கல்): குழு ஒருங்கிணைப்பாளர் திரு.கே.எ.குணசேகரன், உறுப்பினர்கள்: திரு.வி.பி.குணசேகரன், திரு அதியமான், திரு.சந்திரபோஸ், திரு அழகியபெருமாள்.

  • குழு 2 (பெரம்பலூர், திருச்சி, தேனி, மதுரை, திண்டுக்கல்): குழு ஒருங்கிணைப்பாளர் திரு.ராமமூர்த்தி, உறுப்பினர்கள்: திரு.தங்கராஸ் இ.ஆ.ப. (ஓய்வு), திரு.வெற்றி (வழக்கறிஞர்), திரு.பானுமதி (வழக்கறிஞர்), திருரத்தினம் (வழக்கறிஞர்), திரு.நிக்கோலஸ், திரு.வினோத், திரு.வின்சென்ட்.

  • குழு 3 (திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி): குழு ஒருங்கிணைப்பாளர் திரு.கல்யாணி, உறுப்பினர்கள்: திரு.பாண்டி இஆப (ஓய்வு), திரு.கருப்பையா, திரு.மார்க்ஸ், திரு.வேலுசாமி, பேராசிரியா மணிகுமார், திரு.கல்யாணசுந்தரம், திரு.எஸ்.டி.செல்வராஜ்]

  1. பேராசிரியர் கல்யாணி(பிரபா.கல்விமணி)

    மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனமான (அகரம்) கல்வி மற்றும் சமுக புலத்தில் பின் தங்கிய மக்களுக்காக 2006-லிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பேராசிரியரின் சமுகப் பொருப்பையும் நேர்மையும் கண்டு தன்னகமே அரவனைத்துக் கொண்டது. அதற்கு மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் விடுதலை சிறுத்தை என்கிற கட்சி அவருக்கு "அம்பேத்கர் சுடர்" என்கிற விருதை வழங்கியுள்ளது.

  2. இந்த ஆவணங்களை தாண்டி 25.12.1968-யில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமும் தற்போதிய நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இருக்க கூடிய கீழ் வெண்மணி என்ற சிற்றூரில் 44 நபர்களை உயிரோடு எரிக்கப்பட்ட கொடும் செயலை செய்த குற்றாவாளிகளை நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றம் தண்டித்தது. அதை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்கள். அந்த மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுவிக்க குற்றவியல் கோட்பாட்டை மீறியும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக சாதிய உள் நோக்ககத்தோடு ஒரு விளக்கத்தை கொடுத்து விடுதலை செய்தது. அந்த விளக்கத்தை பாருங்கள்:

"இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள், முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூநிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது. தங்களுக்கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள். மூர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களைவிட அதிகம் பாதுகாப்புடனே இருப்பார்கள். மிராசுதாரர்கள் பின்னால் இருந்துகொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே பல குற்றங்களைச் செய்வார்கள் என்றே எவரும் எதிர்பார்ப்பார்களா?"

"வெண்மணி வழக்கு : பதிவுகளும் தீர்ப்புகளும்" - பக்கம் 435
  1. பொதுவாக பட்டியல் மற்றும் பழங்குடியினர் (வன்முறை தடுப்புச்) சட்டம், 1989 சட்டத்திற்கு கீழ் எழும் வழக்குகளையும் குற்றங்களையும் நேர்மறையாக முடிவு செய்ய காவல்துறையும் நீதிமன்றங்களும் எதிராகவும்; எதிர்மறையாக முடிவு செய்ய இந்த இரண்டு அமைப்புகளும் மிக ஆர்வத்துடன் இயங்குகின்றனர். இதையே, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தீர்க்க தரிசனமாக கூறியுள்ளார்:

"தீண்டப்படாதவர்களைக் காலை வாரிவிடுவதில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துகள் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு காவல்துறையும் குற்றவியல் நடுவர் துறையும் இந்துவின் பக்கமே இருக்கின்றன. தீண்டப்படாதோருக்கும் இந்துக்களுக்கும் இடயே நடைபெறும் சச்சரவில் தீண்டப்படாதோர் காவல்துறையிடமிருந்து பாதுகாப்பையோ நீதித் துறையிலிருந்து நீதியையோ ஒருபோதும் எதிர்பாக்க முடியாது. காவல்துறையினரும் நீதித்துறையினரும் இந்துக்கள், அவர்கள் தங்கள் கடமையைவிட தங்கள் இனத்தையே பெரிதும் நேசிக்கின்றனர்"

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 17-பக்கம்.39.

இருந்தபோதிலும் நீதிமன்றங்களில் நடைபெறுகின்ற நீதிபரிபாளனத்தில் இதுபோன்ற பாகுபாடுகள் தெரியாத வண்ணம் மிக நுணுக்கமாக நடந்து கொள்வார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை பேராசிரியரை பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியது.

மேலும், அவருக்காக இந்த வழக்கை நான் நடத்துவதாலும் ஏற்கனவே ஒருசட்ட நிபுணர் எதிர்மறை கருத்தை வழங்கியிருப்பதாலும் "வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா ஏற்றுக்கொள்ளாதா?' என்ற பயம் என் இதய துடிப்பை இரட்டிப்பாக்கியது. என் மூக்கின் வழியே வெப்பக் காற்று வீசத் தொடங்கியது. ஆனால், வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. பொதுவாக இளம் வழக்கறிஞர்கள் தன்னிடம் வரும் வழக்குகளை வெறும் சட்டப் புத்தகங்கள் மற்றூம் முன்னுதாரணத் தீர்ப்புகளின் அடிப்படையில் மட்டுமே அணுகாமல் சட்ட அறிஞர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள் மற்றும் சான்றோர்கள் எழுதிய நூல்களையும் ஆழ்ந்து வாசித்து அவற்றின் கருத்தியலையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படைத் தத்துவத்தையும் சமூகப் பார்வையையும் உள்வாங்கிக் கொள்வது அவசியம். அப்போதுதான் ஒரு வழக்கின் உண்மையான பரிணாமங்களை ஆராய்ந்து, வெறும் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு தர்க்க ரீதியாகவும் நீதிநெறிக்கு உட்பட்டும் வழக்குகளை அணுகி வாதிடும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற ஆலுமைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று சற்று நிதானத்தோடும் ஆலுமையோடும் கூறினேன்.

Interim Stay at the Madras High Court / சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை:

நீதிமன்றம் 10.30 மணிக்கு ஆரம்பித்த பொழுது நீதிபதி. திரு. பி.என். பிரகாஷ் அவர்கள் வந்து அமர்வில் அமர்ந்தார். வரிசைபடி வழக்கு கூப்பிடப்பட்டு (Calling) என் வழக்கையும் கூப்பிட்டார்கள்.

நீதிபதி. திரு. பி.என். பிரகாஷ் அவர்கள்

உடனே, நீதிபதி அவர்கள் இந்த வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம்,1973 பிரிவு-482-யின் கீழ் ரத்து செய்ய இயலாது என எடுத்த எடுப்பிலையே கூறினார். இதை கேட்டபொழுது நான் உயர்அதிர்வின் அழுத்தத்தோடு "மனுதாரரின் சமுக நடவடிக்கைகள் சட்டத்தையும் மிஞ்சக்கூடியது, இந்த வழக்கை வெறும் சட்ட வரம்புக்குள் பார்க்காமல் அவர் செய்த வேலைகளுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் கொடுத்த அங்கீகாரமும் பொது மக்கள் கொடுக்கின்ற மதிப்பையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். அப்பொழுதுதான் நீதிபதி அவர்கள் என்ன ஆவணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் மேற்கண்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினேன். அதன் பிறகு தான் அந்த குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ள விசாரணைக்கு எதிராக இடைக்கால தடை விதித்தார். அப்பொழுது என் முயற்சியை நானே முத்தமிட்டுக் கொண்டேன். என் நண்பர் திரு. கல்யாணி அவர்களும் பெருமிதம் அடைந்தார்.

இறுதியாக இந்த வழக்கு நீதிபதி. திரு. நிர்மல் குமார் அவர்கள் முன்பாக விசராணைக்கு வந்தது. அப்பொழுது அவர் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவு காலாவதியாகி விட்டதால் அந்த உத்தரவை நீட்டித்தும் பேராசிரியர் கொடுத்த புகாரின் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இதுநாள் வரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து உரிய நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவில்லை ஏன்? என்று வினா எழுப்பினார். மேலும் அவர் "யார் யார் மக்களுக்காக உண்மையாக உதவி செய்கிறார்களோ அவர்களையெல்லாம் இதுபோன்ற வழக்குகளில் சிக்க வைத்து குற்றவாளியாக்கி எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற சட்டங்களை கொண்டுவருகிறார்களோ அதை கொட்சைப் படுத்துகிறீர்கள்"

நீதிபதி. M. நிர்மல் குமார் அவர்கள்

என்று அவருடைய உள்ளார்ந்த கோபத்தை நாசுக்காக வெளிப்படுத்தினார். இங்கே, நீதிபதி அவர் கோபத்தை அடக்கி இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்,1950 சரத்து 17-யின் படி சாதி எந்த ரூபத்திலும் இயங்குவதை தடை செய்துள்ளது. எனவே, அரசியல் அமைப்பு சட்டத்தின் ஊழியரான நீதிபதி. M. நிர்மல் குமார் அவர்கள் தனக்கு வந்த கோபத்தை தங்குதடையின்றி வெளிப்படுத்தி தற்குரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து ஒரு உலவியல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் பரவாயில்லை. பேராசிரியர் கல்யாணி மீது பட்டியியல் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை பாதுகாப்புச்) சட்டம்,1989-யின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையை 30.08.2023 அன்று ரத்து செய்து சட்டத்தின் மாண்பையும் பேராசிரியரின் கௌரவத்தையும் காப்பாற்றினார். தீர்ப்பின் நகல் :

1795169264350-1263rd.pdfOpen in new tabDownload

Conclusion: A Beacon of Light / முடிவுரை: கலங்கரை விளக்கம் :

நீதிமன்றத்தில் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையோ அல்லது குற்றப் பத்திரிக்கையோ அல்லது விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டிலோ அல்லது சீராய்வு மனுவிலோ வழக்கை நடத்தும் போது சட்ட நுணுக்கங்களோடு அந்த குற்றம் சாட்டப்பட்ட நபரின் பண்பு நலன்களை ஆராய்ந்து எடுத்துரைக்க வேண்டும். இதையே இந்திய சாட்சிய சட்டம்,1872 பிரிவு-5 கூறுகிறது. வெள்ளையர்கள் எழுதிய நல்ல சட்டங்களை கூட நம்மவர்கள் சாதியக் கண் கொண்டு பார்ப்பது நவநாகரிகச் சமுகத்திற்கு எதிரானது.

வழக்கறிஞர் ப. விஜேந்திரன்

ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்புபவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாய் கலங்கரைவிளக்கம் திகழ்வது போல் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக பேராசிரியர் கல்யாணி அவர்கள் தன் வாழ்நாளை அற்பணித்துள்ளார். அவர்மீதே பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்முறை பாதுகாப்புச் சட்டம், 1989-ன் கீழ் போடப்பட்டிருந்த வழக்கை நீதிபதி. P.N. பிரகாஷ் அவர்கள் இடைக்கால தடை கொடுத்தும் அந்த வழக்கின் இறுதி விசாரணையில் குற்றப்பத்திரிக்கையை நீதிபதி வி. நிர்மல் குமார் அவர்கள் ரத்து (Quash) செய்தும் அவருடைய சமூகப்பணிக்கு மணிமகுடம் சூட்டி நீதியை நிலைநாட்டினர்.

-வழக்கறிஞர் ப. விஜேந்திரனின் நீதியா தேடிய கதைகள் தொடரும் ..

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG