"மல்லி" என்ற உடனேயே அனைவருக்கும் அதன் மணம் மட்டுமே நினைவிற்கு வரும் ஆனால் இந்த வழக்கின் கதாநாயகி “போதுமல்லி" ஒட்டு மொத்த சமூகத்திற்கே வாழ்க்கை மணத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
"அரைக்காசானாலும் அரசாங்க வேலை, கால் காசானாலும் கவர்மெண்ட் வேலை"

என்பது நம் மக்களிடையே ஒரு காலத்தில் நிலவிய மோகம். அப்படி அரசாங்க வேலையில் இருந்தால் தான் இல்லறம் சிறப்பு பெறும் என்ற நம்பிக்கை எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது உண்டு. அது இப்போதும் இருக்கிறது. கூடுதலாக கையூட்டும் கலந்துள்ளது. இப்படி அரசாங்கம் சத்துணவு பணியாளர்கள் அல்லது அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோர்களை அங்கன்வாடி மையங்களிலும் சத்துணவு மையங்களிலும் பணியாளர்களாக நியமித்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு பணியாளர் என்று அங்கீகாரம் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. இதனால் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறார்களோ அந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் இடைத்தரகர்களாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அவர்களின் தொங்கு சதைகள் போன்றோர்களின் மூலமாகவே அங்கன்வாடி பணியாளர்களை நியமித்து வந்தார்கள்.
மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) என்ற ஒரு அமைப்பு இப்படி அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மக்கள் சிவில் உரிமை கழகம் -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா 2004(12) SCC 104 https://www.casemine.com/judgement/in/56ea977d607dba382a0795e8?utm source=chatgpt.com என்ற வழக்கு தொடுத்து அதில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நியமனத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை வகுத்திருந்தது.
(i) To improve the health and nutrition status of children 0-6 years by providing supplementary food and by coordinating with State health departments to ensure delivery of required health inputs; (ii) To provide conditions necessary for pre-school children's psychological and social development through early stimulation and education; (iii) To provide pregnant and lactating women with food supplements; (iv) To enhance the mother's ability to provide proper child care through health and nutrition education; (v) To achieve effective coordination of policy and implementation among the various departments to promote child development.

இப்படி வகுக்கப்பட்ட வழிமுறைக்கு முன்பாக எல்லா மாநில அரசுகளையும் அந்தந்த மாநிலத்தில் எத்தனை அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவை எந்தெந்த இடத்தில் அமைந்துள்ளன. அந்த மையங்களுக்கு பணியாளர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் போன்ற விளக்கங்களோடு ஆணை உறுதி உரையை தாக்கல் செய்ய அறிவுறுத்தி அவைகளில் இருந்து தரவுகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியது.
அதன் பிறகு கூட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையோ சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையிலோ அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்கவுமில்லை; இட ஒதுக்கீடு வழங்கப்படவும் இல்லை. இப்படி வரவேற்கப்படாமலும் அந்த பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமலும் இருப்பது திராவிட கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவற்றின் மீது அக்கறை செலுத்தவில்லை என்பதே எதார்த்தம்.
இந்தச் சூழலில் அதிகாரம் படைத்த நபர்கள் சத்துணவு பணிகளுக்கு அரசாங்க பணிக்கு ஏங்கி கிடக்கும் நபர்களின் இயக்கத்தை சாதணமாக பயன்படுத்தி பணமாக மாற்றி வந்து கொண்டிருந்தார்கள். இதற்கு ஈடு கொடுக்க முடியாதவர், திருமதி போதுமல்லி ஆவார். அவருடைய கணவர் திரு. தர்மராஜன் அவர்களும் கையூட்டு வழங்க மனம் இல்லாதவர். எனவே, அவர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முடிவு செய்திருந்துள்ளார்.
திருமதி போதுமல்லி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கட்டக்குடி பகுதியில் வசிக்கும் பட்டியல் சாதியை சார்ந்தவர். இந்த நிலையில் தமிழக அரசு காலியாக இருந்த அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு செய்திருந்தது. இந்த அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துறை ஆகியோர்கள் மூலமாக பணியாளர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்திருந்தது. ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டக்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு போதுமல்லியே பொருத்தமான மல்லி. ஆனாலும் மல்லியின் மனமறியாத மாவட்ட ஆட்சியர் அவருக்கு பணி அளிக்க மறுத்துவிட்டார்.
காரணம் மாவட்ட ஆட்சியர் மட்டுமே அல்ல. மாறாக அந்தப் பகுதியில் உள்ள ஆளுங்கட்சியின் மாவட்டம்... ஒன்றியம்... வட்டம்... கிளை... தெரு போன்றோர்களை பணக்கண் கொண்டு பார்க்கவில்லை. இதனால் போதுமல்லியின் மணாளன் திரு. தர்மராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளார்.
எனவே அப்பொழுது நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. M. செல்வராஜ் அவர்களை சென்று சந்தித்து அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் நடக்கின்ற ஊழல்களை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஆலோசனை கேட்டுள்ளார். உடனே திரு. M. செல்வராஜ் அவர்களின் என்னத் தராசில் என் உருவம் ஓடோடி வந்து நின்றுள்ளது.

மறுநாள் காலை திரு. தர்மராஜன் அவர்கள் சுமார் காலை 8:30 மணியளவில் என்னுடைய அலுவலகத்தை விசாரித்து வந்து சேர்ந்தார். நான் வழக்கம்போல் அன்றைய வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான தயாரிப்பு வேலைகளை மும்முரமாக இருந்தேன். அந்த நிலையில் தர்மராஜனை பார்த்த பொழுது அவரின் வருகையை கேட்டு அறிவதற்கு முயற்சி செய்தேன். அவர் அவருடைய பிரச்சனையும் அதற்காக திரு. எம். செல்வராஜ் அவர்களின் ஆலோசனை பெற்றதையும் விளக்கி கூறினார்.
அப்பொழுது திரு.எம்.செல்வராஜ் அவர்கள் என்னைப் பற்றி ஒரு அடைமொழி கூறியதாக கூறினார். அந்த மொழியை மனனம் செய்து வைத்திருந்தது போல மல மலவென்று கொட்டினார்.
Life
Address
Justice
CONSTITUTION OF INDIA
Dignity
HUMAN RIGHTS
LEGAL AID
One who writes an address for those who have no address..
அதாவது "முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி எழுதுபவர் அவர்தான் என்று உயர்வுநவிற்சி அணியில் கூறியதாக கூறினார். இந்த வாசகத்தை யார் கேட்டாலும் காவியக் கழிப்படைவது இயற்கையானதே... இருந்த போதிலும் நீதிமன்றத்தின் காலை வேலை ஒலி அடித்து விடும் என்பதால் அவரை அலுவலகத்தில் அமர வைத்துவிட்டு நீதிமன்ற பணிகளுக்கு சென்றேன். நீதிமன்றத்தில் இருக்கும் பொழுதெல்லாம் நீதிமன்ற மணியின் ஓசையை விட திரு எம் செல்வராஜ் எனக்கு கொடுத்த முகவரியின் ஓசையே என் மனக்காதுகளில் கூடுதலாக ஒலித்துக் கொண்டிருந்தது.
வழக்குப் பணிகளை முடித்துவிட்டு உடனடியாக வந்து தர்மராஜன் அவர்களை விசாரித்து குறிப்பெடுத்துக் கொண்டு வழக்கு தயார் செய்து தாக்கல் செய்தேன். அந்த காலகட்டத்தில் இது போன்ற எண்ணற்ற வழக்குகளை தாக்கல் செய்து உத்தரவுகள் பெற்றுக் கொண்டிருந்தேன். உத்தரவு என்றால் பேசப்படும் அளவிற்கு பகறப்படும் உத்தரவல்ல... மாறாக மணம் வீசாத உத்தரவுளாக இருந்தன. அதாவது அங்கன்வாடி பணி கிடைக்காதவர்கள் தங்கள் வாழ்நிலையை கூறி தங்களது மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருப்பார்கள். அந்த மனுவின் மீது ஒரு வழக்கு தாக்கல் செய்து மனுதாரர் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோருவோம். நீதிபதிகளும் உடனே மனுவை ஏற்று மாவட்ட ஆட்சியருக்கு மனுவை பரிசீலனை செய்யுங்கள் என்று உத்தரவிடுவார். இதனால் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் வந்து சேர்ந்துவிடும்; நீதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் எண்ணிக்கை கூடிவிடும்; பெரும்பாலான வழக்காளிகளுக்கு மன உளைச்சலும் கூடிவிடும். காரணம் அந்த உத்தரவினால் வழக்காலிகளுக்கு எந்த பயனும் இருக்காது. இன்றும் அது நடைமுறையில் உள்ளது.
இதேபோன்ற, நீதிமன்ற மோசடியை இதுவரை யாரும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. ஆனால் இதற்கு விதிவிலக்கு போதுமல்லியின் வழக்காக இருக்கும் என்பது அன்றைய தினத்தில் எனக்கு தெரியாது. இப்படி போதுமல்லியின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை முதல் விசாரணைக்காக நீதிபதி கே.என். பாஷா அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அரசு பதிலளிக்குமாறு வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைத்தார்.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட வழக்கானது புதிதாக நியமிக்கப்பட்டிருந்த நீதிபதி.டி.ராஜா அவர்கள் முன்பாக அன்றைய தினத்தில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்ற அறை எண் 16-ல் விசாரணைக்காக வந்தது. நீதிபதியாக இருந்த டி ராஜா முறையாக பயிற்சி செய்யாமல் மறைமுகமான வழியில் நீதிமன்றத்தின் பின்புறமாக பணியமர்த்தப்பட்டவர். அவர் பணியமர்த்தப்படுவதை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர்களுக்கு கொடி கொடுத்தவன் நான். இந்த விவரம் டி ராஜாவுக்கு நன்றாகவே தெரியும். எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி தந்திரமாக நீதிபதி பணியில் அமர்ந்து விட்டார். அதன் பிறகு வருகின்ற வழக்குகளை சட்டத்தின் கண்கொண்டு பார்க்க வேண்டுமே ஒழிய எந்த வழக்கறிஞரையும் ஓரக்கண்ணால் பார்க்க கூடாது. ஆனால் ராஜா அந்த மனநிலையில் இல்லை. நீதிபதி. T. ராஜாவிற்கு இருப்பது ஓரக்கண் மட்டுமே...
அந்த நீதிமன்ற அறையில் அன்று பேர் சொல்லக்கூடிய வழக்கறிஞர்களான R. வைகை, அண்ணா மேத்யூ மற்றும் டி மோகன் ஆகியோர்கள் அவரவர் வழக்கிற்காக அமர்ந்திருந்தார்கள். என்னுடைய வழக்கை நீதிமன்றத்தில் அலுவலர் (Court Officer) அழைத்தார். நான் வழக்கின் பொருண்மையை பேச ஆரம்பித்தேன். உடனடியாக நீதிபதி குறிக்கிட்டு, "இந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாதே? எப்படி இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு கடிந்து கொண்டார். அவர் ஏற்கனவே வழக்கை மட்டுமல்ல என்னையும் படித்து வைத்திருந்தார் அல்லவா? அதற்கு நான் மறுப்புரையாக "அதனால் தான் இந்த வழக்கையே தாக்கல் செய்துள்ளேன்" என்று கூறினேன். அந்த வார்த்தைகளில் சற்று காரநெடி தெரிந்தது. ஏனென்றால், ராஜா வந்த வழி தெரியுமல்லவா? என் வாதத்தை கேட்க மனமில்லாமல், "இல்லை இல்லை வழக்கை தள்ளுபடி செய்யவே போகிறேன்" எனக் கூறினார்.
இதனால் எனது அம்பினை கையில் எடுத்துக்கொண்டு, "இது ஒன்றும் அரசியலமைப்பு சட்டப் பதவியல்ல எந்த வழிமுறையும் இல்லாமல் கொல்லைப்புறமாக வருவதற்கு;நான் கேட்பது கடைநிலை ஊழியர் ஆன அங்கன்வாடி பணியாளர்களுக்கான இட ஒதுக்கீடு" என்று கூறி அவரது ஓரக்கண்ணின் மீது அம்பு எய்தினேன். இதனால் அவர் சற்று நிதானம் இழந்தார். ஆனால் நான் வழக்கையும் போதுமல்லியின் வாழ்க்கையையும் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தேன். ஒரு சில தினங்கள் முன்புதான் நான் மூக்கு கண்ணாடி அணியத் தொடங்கினேன். புதியதாக பயன்படுத்தும் போது கண்ணாடி அணிந்து இருப்பது இடையூறாக இருக்கும் உணர்வு இருக்கும். இது அனைவருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. மீண்டும் நீதிபதி, "என்ன கூறினீர்கள்" என்று அதிகார தோரணையில் மிரட்டும் பார்வையில் என்னை கேட்டார். நான் உடனே என் கண்ணாடியை வலது கரம் கொண்டு வெட்டென்று கழற்றிக்கொண்டு மேற்கூறிய அதே வாசகத்தை சுருதி மாறாமல் கூறினேன். நீதிபதிக்கு இதற்கு மேல் அந்த வழக்கை நடத்துவதற்கோ என் வார்த்தைகளை கேட்பதற்கோ மனமில்லை. எனவே, அவர் உடனே வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றம் செய்து "இந்த வழக்கை என்னால் விசாரிக்க இயலாது" என்று கூறிவிட்டார். அப்பொழுதே என்மனதில் மல்லி மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை இழந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும் பொழுதே அவர் நீதி பரிபாலனம் செய்யும் மனநிலையில் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் சமூக பின்னணியையும் தமிழ்நாடு தான் முதன் முதலில் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்கான முன்னோடியாக இருந்து [Communal G.O], 16.09.1921ல் நீதிக்கட்சி தமிழ்நாட்டை ஆட்சி செய்த போது பிறப்பிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொண்டும் அதன் பிறகு தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (Reservation of Seats in Educational Institution and Appointments or Posts in Service under the State) 1993 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 சரத்து 15 போன்றவைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு அவரது ஒருபுற மனசாய்வு ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரின் அந்த ஒருபுற மனச்சாய்வு மனநிலையானது அவர் பதவியேற்கும் போது ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது மட்டுமல்லாமல் [3rd Schedule VIII Extraction] அதற்கு எதிரானதாகவும் நமது உச்ச நீதிமன்றம் 1997, மே-7ஆம் தேதி நீதிபதிகள் தங்களுடைய நீதித்துறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு கோட்பாடை வகுத்துள்ளது. Restatement of Values of Judicial Life இதற்கு எதிராகவும் அவர் நடந்து கொண்டார். இப்படி நீதிபதிகள் நடந்து கொள்வதால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம் இதுவரை நிறைவு பெறாமலேயே உள்ளது.

இப்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பெற்ற வழக்கானது மாண்புமிகு நீதிபதி. கே. சந்துரு அவர்களிடம் பட்டியலிடப்பட்டது. அவ்வழக்கு தற்போதைய நீதிமன்ற அறை எண். 34-ல் கே.சந்துரு அவரிடம் வழக்கு பட்டியலிடப்பட்டவுடன் என்னுடைய ஒரு பகுதி மூளை சிவப்பாகவும் மறுப்பகுதி மூளை கருப்பாகவும் மாறிவிட்டது. ஏனென்றால், நீதிபதி கே. சந்துருவி எழுத்துக்களின் வலிமையை யாராலும் வெல்ல முடியாது. இருந்தபோதிலும் வழக்கறிஞர் அனைவருக்குமே நீதிபதி கே.சந்துருவின் நீதிமன்றத்திற்கு செல்லும் பொழுது சற்று அச்ச உணர்ச்சியை ஏற்படுத்தும். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதே வேளையில் எந்த வழக்கிலும் அவரிடம் நான் அமைதியான முறையில் பேசிவிட்டு அவர் கூறுவதையே இறுதியானது என்று வந்ததில்லை. இருப்பினும் இந்த வழக்கைப் பொறுத்தவரை சற்று கூடுதலான அச்ச உணர்ச்சியுடன் அவரிடம் வழக்கிற்கு முன்னிலையானேன்.
இதற்கு காரணங்கள் பல... ஒன்று எம். செல்வராஜ் அவர்கள் போதுமணியின் கணவர் திரு. தர்மராஜன் அவர்களிடம் என்னைப் பற்றி கூறிய வார்த்தையான, முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி எழுதுபவர் என்பதும் மற்றொன்று "போதுமல்லிக்காகவும் மற்ற நபர்களுக்காகவும் போடப்பட்ட வழக்குகளில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 30.05.2008-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி திரு சந்துரு இட ஒதுக்கீடு இல்லாத போது எவ்வாறு பரிசீலனை செய்வார்" என்ற பயம் மூன்றாவது "போதுமல்லியின் வாழ்க்கைக்கு இந்த வழக்கு தான் அச்சாணி" போன்றவைகள் ஆகும் வழக்கை முதல் நாள் 26.02.2016 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிலுறை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை 08/3/2010 தேதிக்கு ஒத்தி வை
த்தார். பதிலுறை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கு விசாரணை நடந்தது. அப்பொழுது நீதிபதி சந்துரு அவர்கள் என்னிடம் மக்கள் சிவில் கழகத் தீர்ப்பு ஒன்று SCALE என்ற தீர்ப்பு தொகுப்பில் உள்ளது. அதை எடுத்து வருமாறு கூறினார். உடனே நான் அதை நீதிபதிகளுக்கான நூலகத்தில் சென்று 2004 (8) SCALE 752 என்ற தொகுப்பில் இருப்பதை தேடி எடுத்து நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தேன். அதன் பிறகும் வழக்குகள் பல தேதிகளில் நடைபெற்றது.
OXFORD INDIA PAPERBACKS Blocked by Caste ECONOMIC DISCRIMINATION in MODERN INDIA edited by SUKHADEO THORAT KATHERINE S. NEWMAN with a foreword by KAUSHIK BASU
இந்த நிலையில் INDIAN ECONOMIC AND POLITICAL WEEKLY என்ற வார இதழில் சுகதேவ் தோரத் மற்றும் கேத்தரின் எஸ் நியூ மேன் ஆகியோர் தொகுத்து OXFORD UNIVERSITY பதிப்பகத்தால் "BLOCKED BY CASTE" ECONOMIC DISCRIMINATION IN MODERN INDIA என்ற புத்தகத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை படித்ததும் போதுமல்லியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என கருதினேன். எனவே உடனடியாக நானும் அப்பொழுது அலுவலக உதவியாளராக இருந்த மா அகல்யா என்பவரும் பல புத்தக நிலையங்களுக்கு சென்று சுகதேவ் தோரத் மற்றும் கேத்தரின் எஸ் நியூ மேன் ஆகியோர் தொகுத்து OXFORD UNIVERSITY "BLOCKED BY CASTE" ECONOMIC DISCRIMINATION IN MODERN INDIA என்ற ஆராய்ச்சி நூலைத் தேடி சென்னை மாநகரம் முழுவதும் உள்ள புத்தக கடைகளில் அலசி ஆராய்ந்து 11.03.2010 அன்று HIGGIN BOTHAMS, Mount Road எனும் புத்தக நிலையத்தில் வாங்கினோம். அதனை படித்த பொழுது அங்கன்வாடி மையங்களில் பச்சிளம் குழந்தைகள் எவ்வாறு அங்கன்வாடி ஊழியர்களால் சாதி ரீதியாக உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். உடனே இதனை நகலெடுத்து மறு தேதியில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சந்துரு அவர்களுக்கு முன் சமர்ப்பித்து அது குறித்து பேசினேன். அப்பொழுது அவர் ஏற்கனவே கூறிய மக்கள் சிவில் உரிமைக் கழக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பெற்ற தீர்ப்பையும் அவரிடம் கொடுத்தேன்.
வழக்கம்போல் அரசு தரப்பில் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவராகவும் அவர்களுக்கு வேலை மதியம் வரை மட்டும் தான் என்று எந்தவித மனக் கூச்சமும் இல்லாமல் நீதிமன்றத்தில் கூறினார்கள். அதற்கு நீதிபதி சந்துரு அவர்கள், "நீங்கள் ஒருநாள் 50 பேருக்கு சமைத்துப் பாருங்கள் அதன் கஷ்டம் தெரியும் என்று அவருக்கே உரிய பாணியில் கூறினார். அதற்குப் பிறகு வழக்கை உத்தரவிடுவதற்காக எடுத்து வைத்தார் (Reserved for Orders).
அதன் பிறகு 19.04.2010 அன்று வழக்கு உத்தரவு பகரப்படுவதற்காக பட்டியலிடப்பட்டது. வழக்குப்பட்டியலை காலையில் பார்த்த உடனேயே சற்று சலனம், பயம், மகிழ்ச்சி அனைத்தும் கலந்த கலவையாக எங்களின் அலுவலகத்தின் நிலை மாறியது. அப்பொழுது இளம் வழக்கறிஞர்களாக இருந்த கு சரவணன் மற்றும் ஜெ. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு என்னுடன் வந்து 10.00 மணி தொடங்கி காத்திருந்தனர். நீதிபதி சந்துரு வழக்கம்போல் 10.15 மணி அளவில் நீதிமன்றத்திற்கு வந்து தனது கோட் பையில் இருந்த துண்டு காகிதத்தை எடுத்து எந்தெந்த வரிசை எண் வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது எந்தெந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தினை எடுத்து படித்தார். எங்கள் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்குகளின் பட்டியலில் இருந்ததால் மல்லி மணம் வீசி மலர்ந்தது உணர்ந்து மகிழ்ச்சியில் திழைத்தோம்.
https://indiankanoon.org/doc/1857374/ இந்த மேற்குறிப்பிட்டுள்ள தீர்ப்பு MADRAS LAW JOURNAL எனும் தீர்ப்புத் தொகுப்பில் 2010 IV MLJ 46 போதுமல்லி -எதிர்- மாவட்ட ஆட்சியர் மற்றும் 2 நபர்கள் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் அங்ககப்பண்பை உணர்ந்த மதிப்பிற்குரிய ஜொஹன்னா தீக்ஷா என்னும் பத்திரிக்கையாளர் என்னிடம் நேர்காணல் கண்டு Scroll.in எனும் இணையதளத்தில் இந்த வழக்கு குறித்து பதிவு செய்துள்ளார்.
https://scroll.in/article/1010617/a-dalit-womans-battle-for-the-job-that-was-her-right
வழக்கு பட்டியலிடப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
JUDGE | HEARING DATE | BUSINESS | ADJOURNMENT |
HONOURABLE MR JUSTICE K. N. BASHA | 17.06.2009 | ||
HONOURABLE MR JUSTICE K. N. BASHA | 18.06.2009 | KNBJ-Notice 4 weeks pnp | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE T. RAJA | 23.10.2009 | ||
HONOURABLE MR JUSTICE T. RAJA | 23.11.2009 | TRJ (23.11.2009-01.12.2009) | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE T. RAJA | 01.12.2009 | TRJ (01.12.2009-03.12.2009) | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE T. RAJA | 03.12.2009 | TRJ (03.12.2009) 3 Weeks | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 26.02.2010 | KCJ-(26.02.2009-08.03.10) DIRN | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 08.03.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 09.03.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 17.03.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 18.03.2010 | KCJ (18.03.2010-25.03.2010) | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 25.03.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 26.03.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 29.03.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 30.03.2010 | KCJ (30.03.2010-12.04.2010) | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 12.04.2010 | KCJ (12.04.2010-15.04.2010) DIRN | ADJOURNED |
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 15.04.2010 | ||
HONOURABLE MR JUSTICE K. CHANDRU | 19.04.2010 | ALLOWED |
இதன்பின் நாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்ததற்கான காரணம் இந்த சத்துணவு பணியாளர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது தமிழக சட்டசபையில் மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல்களோடு (அ) வாக்கெடுப்பின் அடிப்படையில் இது நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும் பெண்களின் நிலை குறித்தும் அரசாங்கத்தினால் பெண்களின் உழைப்பை பெற்றாலும் அவர்களுக்கு அரசு ஊழியர் என்ற அங்கீகாரம் இல்லை. இதனால் அவர்கள் பணி நியமனம் செய்வதென்பது அரசியல்வாதிகளின் கைகளிலும் மாவட்ட ஆட்சியரின் கைகளிலும் சிக்கிக்கொண்டு வதைபடுவதினால் ஒட்டுமொத்த சமூக நலன் கருதி தனி ஒரு நீதிபதியாக இருந்தாலும் சட்டத்தின் துணை கொண்டுசமூக நீதி என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தினார்.
இந்த வழக்கு தமிழக அரசால் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதே(inlimine) தள்ளுபடி செய்யப்பட்டதாகும். இதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போது (SLP) சிறப்பு கேட்ப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் பிறகு எங்களுக்கு தெரியவந்தது. இப்படியாக நீதிபதி சந்துருவின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு சத்துணவு பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டு அரசு வேலையாக மாற்றப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது நடைபெறுகின்ற சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகின்றது.

நான் தாக்கல் செய்தது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களின் 30.05.2008 தேதியிட்ட உத்தரவை எதிர்த்து மட்டுமே ஆகும். ஆனால் நீதிபதி சந்துரு அவர்கள் இந்த வழக்கை துடுப்பாக பயன்படுத்தி ஒட்டுமொத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் அவர்களை அரசு பணியாளர்களாக மாற்றியதோடு அல்லாமல் அதன் பிறகு நடக்கின்ற அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பொழுது இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று விளம்புகை செய்தது. போதுமல்லிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் நீதியின் பலனை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி. கே. சந்துரு அவர்களைத் தவிற ஏற்கனவே வந்த இரண்டு நீதிபதிகளிடமும் இறுதி விசாரணை நடந்திருந்தால் வழக்கிற்கு இறுதி சடங்கு நடந்திருக்கும் என்பதை என்னால் அருதியிட்டு கூற முடியும். ஏனென்றால் வழக்கை நடத்துகின்றபோது தனிமனித மற்றும் சமூக தேவை குறித்த அக்கறை நீதிபதிகளின் ரத்த நாளங்களில் தமணிவழியாக செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான நீதிபதிகளின் சிரை வழியாக அது செல்கிறது. எனவே, நீதிபரிபாலனம் என்பது முறையாக நடப்பதில்லை.

குறிப்பாக நீதிபதி திரு. கி. சந்துரு அவர்கள் 08.03.2013 அன்று பணிநிறைவு பெறும்போது தனக்களிக்கப்பட்டிருந்த அனைத்து அங்கவஸ்திரங்களையும் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு நீதிமன்றத்தின் வடக்குபுறமாக உள்ள 2-வது நுழைவாயிலின் வழியாக தமிழர் பண்பாட்டின்படி வேட்டி சட்டை அணிந்து கொண்டு வெளியேறினார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் நீங்கள் இதுவரை வழங்கிய தீர்ப்புகளில் எந்த வழக்கின் தீர்ப்பை முக்கியமாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், "சத்துணவு பணியாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு என்று நான் உழைத்த உழைப்பிற்கு மகுடம் சூட்டினார்"
நீதிபதி. திரு. கே. சந்துரு அவர்களுக்கு 09.11.2009 அன்று நிரந்தர நீதிபதி பதிவியாக

நியமனம் செய்யப்பட்டார். அவ்வாறு நிரந்தரம் செய்யவில்லை என்றால் சத்துணவு பணியாளர்களின் பணி நியமனம் செய்யப்பட்டிருக்காது. எனவே, நீதித்துறையில் இனிமேலாவது யாரை நீதிபதிகளாக நியமிக்கவேண்டும் என்று யோசித்து வள்ளுவரின் வாக்குப்படி நியமனம் செய்யப்பட வேண்டும்:
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
— குறள் எண்: 516
வழக்கறிஞர் ப.விஜேந்திரனின் நீதியை தேடிய கதைகள் தொடரும்..

கருத்துகள் (0)
கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion
கருத்து பதிவிட உள்நுழையவும் — log in