வரலாற்றுப் பின்னணியும் ஒப்பீட்டு ஆய்வு முகவுரையும் (Historical Background & Comparative Context)

இயற்கை நீதியாக இருந்தாலும் சரி, மனித பிறவிகளால் வழங்கப்படுகின்ற சட்ட நீதியாக இருந்தாலும் சரி, அகில உலகப் பந்தின் முழுமைக்கும் ‘சட்டத்தின் ஆட்சி’ (Rule of Law) என்பது எவ்வித பாகுபாடுமின்றிப் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.
அவ்வகையில், அமெரிக்காவில் மார்க்கஸ் கார்வே மற்றும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்திற்கு எதிராக நடத்திய நீதிக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, தமிழகத்தின் வனப்பகுதிகளில் அரசு இயந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக வீரப்பன் அவர்கள் மேற்கொண்ட எந்தவொரு செயலாக இருந்தாலும் சரி, அவையனைத்தும் நீதியைத் தேடி நிகழ்த்தப்பட்ட போராட்டங்களேயாகும்.

பொதுச் சமூகமும் அரசு அமைப்புகளும் இவர்கள் இருவருக்கும் பொருத்திய படிமங்களும் உருவகங்களும் வெவ்வேறு முகங்களைக் கொண்டிருந்தபோதிலும், அநீதிக்கு எதிரான அவற்றின் உள்ளடக்கமும் அடித்தளமும் ஒன்றே ஆகும். இதன் ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தினாலேயே, மார்ட்டின் லூதர் கிங்கின் படுகொலை வரலாறும் இங்கு ஒப்பீட்டுப் புள்ளியாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
2. சென்னை உயர் நீதிமன்ற வழக்கு W.P. No. 7337/2017 மற்றும் உச்ச நீதிமன்ற முன்னுதாரணங்கள் (High Court W.P. No. 7337/2017 & Precedents)
சதீஷ் குமார் 2017-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த ரீட் மனு W.P. No. 7337/2017, சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி ஆர். சுப்பிரமணியன் அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. விஜேந்திரன், காவல்துறையினரால் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட அர்ஜுனன் தொடர்பான பருப்பொருண்மைகளையும் (material facts), அவரது மகன் சதீஷ் குமார் நீதிக்காகத் தொடர்ந்து எடுத்து வரும் சட்டப் போராட்டங்களையும் விரிவாக வாதிட்டார். சட்டவிரோதக் காவல் மரணத்திற்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
2.1. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மேற்கோள் (Supreme Court Precedent)
இவ்வழக்கின் சட்ட ரீதியான உரிமைக்கோரலுக்கு வலுசேர்க்கும் வகையில், மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பான INHUMAN CONDITIONS IN 1382 PRISONS, IN RE, 2017 (10) SCC, Page No. 658 (https://indiankanoon.org/doc/88050370/) சுட்டிக்காட்டப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள பத்திகள் 54, 55 மற்றும் 59 நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன:
"54. The case law indicates that over the last several decades this Court and almost every High Court has relied on Article 21 of the Constitution and thought it appropriate to compensate the next of kin for an unnatural custodial death. The constitutional courts can go on delivering judgment after judgment on this issue and award compensation, but unless the State realizes that custodial death is itself a crime and monetary compensation is not necessarily the only appropriate relief that can be granted to the next of kin of the deceased, such unnatural deaths will continue unabated. Therefore, what is needed is a review of all prisons with a humanitarian nuance.
55. Over the last several years, there have been discussions on the rights of victims and one of the rights of a victim of crime is to obtain compensation. Schemes for victim compensation have been framed by almost every State and that is a wholesome development. But it is important for the Central Government and the State Governments to realize that persons who suffer an unnatural death in a prison are also victims - sometimes of a crime and sometimes of negligence and apathy or both. There is no reason at all to exclude their next of kin from receiving compensation only because the victim of an unnatural death is a criminal. Human rights are not dependent on the status of a person but are universal in nature. Once the issue is looked at from this perspective, it will be appreciated that merely because a person is accused of a crime or is the perpetrator of a crime and in prison custody, that person could nevertheless be a victim of an unnatural death. Hence the need to compensate the next of kin.
59. We expect the above directions to be faithfully implemented by the Union of India and State Governments. In the event of any difficulty in the implementation of the above directions, the Bench hearing the suo motu public interest litigation in the High Court in term of our first direction is at liberty to consider those difficulties and pass necessary orders and directions".
2.2. சென்னை உயர் நீதிமன்ற முந்தைய தீர்ப்புகள் & ஆவண ஆதாரங்கள்

சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள தீர்ப்புகளான W.P. No. 29314/2018 (நாள்: 13.08.2021) மற்றும் W.P. No. 28495/2011 (நாள்: 10.11.2021) ஆகியவை ஆஜர்படுத்தப்பட்டு, சதீஷ் குமாரின் மனுவும் இழப்பீடு பெறத் தகுதியானது என்று வாதிடப்பட்டது.
மேலும், நாட்டறாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அர்ஜுனன் இறந்துவிட்டதாக வழங்கிய இறப்புச் சான்றிதழும், அதன் அடிப்படையில் தர்மபுரி கூடுதல் அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றம் 19.12.2006 அன்று S.C. No. 200/2002 வழக்கில் வழங்கிய தீர்ப்பும் ஆவணச் சான்றுகளாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
இருப்பினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் (தி.மு.க. அரசு) கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, அர்ஜுனனின் இறப்பே கேள்விக்குறியாக உள்ளது என்றும், எனவே இழப்பீடு வழங்க இயலாது என்றும் வாதிட்டார். இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழும் தர்மபுரி நீதிமன்றத் தீர்ப்பும் பொய்யானவை என்பதை மாநில அரசு மறைமுகமாக வாதிட்டது.
2.3. நீதிமன்றத்தின் வழக்காணை (Court Order Dated 11.08.2022)
மாண்புமிகு நீதிபதி ஆர். சுப்பிரமணியன் அவர்கள் சட்டத் தொழிலில் மிகுந்த திறமையும் சற்று "கந்தக புத்தியும்" கொண்டவர் என்பதால், இருதரப்பு வாதங்களின் சாராம்சத்தைச் சட்டெனப் புரிந்துகொண்டார். இருப்பினும், மனுதாரரின் மனு மீது நேரடியான நேர்மறை உத்தரவை (Positive Order) பிறப்பிக்காமல், மனுதாரரின் கோரிக்கையை மீண்டும் அரசின் பரிசீலனைக்கே அனுப்பி, "பந்தை அரசின் விளையாட்டு மைதானத்தில் (Government Ground) உதைத்து தள்ளினார்".

11.08.2022 நாளிட்ட நீதிமன்ற வழக்காணை:
"2. Pursuant to the directions of the Hon'ble Supreme Court in Inre Inhuman Condititons in 1382 Prisons, reported in 2017 (10) SCC, 658. The State Government has issued Government orders for determination of Compensation for victims of atrocity and crimes. Under the said Government orders, powers have been vested in the committee to award compensation. In view of the same, this court had disposed of several Writ petitions in W.P.No. 29314/2018 dated 13.08.2021 and W.P.No.28495/2011 dated 10.11.2021, permitting the petitioner to send a fresh representation to the Authority seeking compensation along with a copy of this order.
3. In view of the same, this writ petition is also disposed of with the direction to the petitioner to approach the Authority constituted by the Government for determination of compensation by way of a fresh representation. If any such representation is made by the petitioner, the same shall be disposed of within a period of three months from the date of receipt of the same. No costs. Consequently, the connected miscellaneous petition is closed".
3. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு C.P. No. 381/2024 & மாவட்ட ஆட்சியரின் நிராகரிப்பு உத்தரவு (Contempt Petition No. 381/2024 & Rejection Order)
நீதிமன்ற உத்தரவின்படி சதீஷ் குமார் 16.10.2022 அன்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்குப் புதிய மனுவை அனுப்பினார். உரிய காலத்தில் நடவடிக்கை ஏதும் இல்லாததால், 19.08.2023 அன்று வழக்கறிஞர் அறிவிப்பு (Legal Notice) அனுப்பப்பட்டது. அதற்கும் அரசுத் தரப்பில் பதில் வராததால், 03.01.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் C.P. No. 381/2024 என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
3.1. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நிராகரிப்பு உத்தரவு விவரங்கள் (District Collector's Order Details)
11.03.2024 அன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பாக இவ்வவமதிப்பு வழக்கு முதல் விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரால் அன்றைய தினமே (11.03.2024) அவசர அவசரமாகக் கையொப்பமிடப்பட்ட 4 பக்க நிராகரிப்பு உத்தரவை (ந.க.01/2017/சி1) அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.




திறந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, திடீரெனக் கையில் கொடுக்கப்படும் ஒரு சிக்கலான அரசுக் கடிதத்தை உடனடியாகப் படித்து, செரித்து, தர்க்கரீதியான பதிலை நீதிமன்றத்தில் அளிப்பது எந்தவொரு வழக்கறிஞருக்கும் சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் மனித அறிவு என்பது "ChatGPT" கிடையாது. அத்தகைய நடைமுறை அநீதியைச் சுட்டிக்காட்டி வாதாடியபோது, மாவட்ட ஆட்சியரின் 4 பக்க உத்தரவின் பின்னணியில் உள்ள முரண்பாடுகள் வெளிப்பட்டன.
மாவட்ட ஆட்சியரின் நிராகரிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்ட முக்கியக் காரணங்கள்:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே. எம்.சரயு ஓசூர் சார் ஆட்சியர் அறிக்கை (பார்வை-5): கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், சேசுராஜபுரம் அஞ்சல், அட்டைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் குமாரின் தந்தை அர்ஜுனன் (த/பெ. குருசாமி) 13.06.1995 அன்று இறந்ததாக 26.12.2001 அன்று இறப்புச் சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகப் பதிவேடு ஆய்வு: நாட்டறாம்பாளையம் கிராம 2001-ஆம் ஆண்டிற்கான இறப்புப் பதிவேட்டை ஆய்வு செய்ததில், மொத்தம் 17 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. வரிசை எண் 17-இல் உள்ள சான்று 20.12.2001 அன்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் சமர்ப்பித்த 26.12.2001 நாளிட்ட சான்றிதழ் வரிசை எண் 18 எனக் குறிப்பிட்டுள்ளதால், பதிவேட்டில் வரிசை எண் 18 இல்லாத சூழலில் இதன் மெய்த்தன்மையை அறிய இயலவில்லை.
முரண்பாடான தேதிகள்: மனுதாரர் தனது தந்தை அர்ஜுனன் 14.09.1995 அன்று வீரப்பனுக்கு உணவு மற்றும் ஆயுதம் கடத்தியதாக கர்நாடக காவல்துறையால் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகமரை கிராமத்தில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இறப்புத் தேதியுடன் (13.06.1995) முரண்படுகிறது.
காவல் நிலையப் பதிவேடு: அஞ்செட்டி காவல் நிலையத்தில் அர்ஜுனன் மீது குற்ற வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
அரசின் இந்த முரண்பாடான அறிக்கையைக் கண்ட நீதிபதி, வழக்கினை 10.04.2024-க்கு ஒத்திவைத்து, அர்ஜுனன் இறந்த தேதியிலிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி வரையிலான 6 ஆண்டுகால பிறப்பு-இறப்புப் பதிவேடுகளைத் தாக்கல் செய்யவும், மாவட்ட ஆட்சியர் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
3.2. அவமதிப்பு வழக்கு இறுதி உத்தரவு (Contempt Case Final Order)
07.06.2024 விசாரணை: நீதிமன்ற உத்தரவின்படி புதிய விசாரணை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமல், முந்தைய ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் கொட்டப்பட்டன. இதனால் கோபமடைந்த நீதிபதி, "நீங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கு ஒட்டுமொத்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் கொட்டிவிட்டீர்கள், நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்" என்று சிறப்பு அரசு வழக்கறிஞரிடம் கடுமையான குரலில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
05.07.2024 விசாரணை: கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு. ஜே. ரவீந்திரன் ஆஜராகி, 1969 பிறப்பு-இறப்புப் பதிவுச் சட்டத்தின்படி நாட்டறாம்பாளையம் கிராமப் பதிவேட்டில் 2001-இல் 17 பதிவுகள் மட்டுமே உள்ளன என்பதையும், வரிசை எண் 18 இல்லை என்பதையும் அசல் பதிவேடுகளுடன் காண்பித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியன் அவமதிப்பு வழக்கினை முடித்து வைத்துப் பிறப்பித்த இறுதி உத்தரவு (https://mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/1142688):
"The grievance of the petitioner is that the order dated 11.08.2022 has not been complied with within the time granted. Pursuant to the notice issued the entire files relating to the enquiry have been produced. It is seen there from that the District Collector, Krishnagiri has passed an order on 11.03.2024, though belatedly, rejecting the claim of the petitioner that his father was illegally confined by the Police. Since the order has now been complied with, there is no cause for proceeding with the contempt. 2. In view of the above, the Contempt Petition is closed, leaving it open to the petitioner to challenge the rejection order in the manner known to law".
நீதிபதிகள் பதவி ஏற்ற்றவுடனேயே அவர்களுக்கு "தெய்வீக நோய் (Divinity Virus)"

பிடித்துவிடுகிறது என்று இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா (Tushar Mehta) அவர்கள் எழுதிய "The Bench, The Bar and the Bizarre (2026)" என்ற நூலில் குறிப்பிட்டுள்ள கேலிச்சித்திரம் போன்ற அவதானிப்பு இந்நீதிமன்றச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.
4. புதிய ரீட் மனு W.P. No. 4286/2025 & இடைக்காலத் தள்ளுபடி (Writ Petition W.P. No. 4286/2025 & Dismissal)
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் 11.03.2024 நாளிட்ட நிராகரிப்பு உத்தரவை (ந.க.01/2017/சி1) எதிர்த்து சதீஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய ரீட் மனு W.P. No. 4286/2025 தாக்கல் செய்தார்.
4.1. கோரப்பட்ட பரிகாரம் (Prayer in Writ Petition)
மனுவில் கோரப்பட்ட முழுமையான பரிகாரம் (Prayer):
"For the above-mentioned reasons, it is therefore prayed that this Hon'ble Court may be pleased to issue appropriate WRIT, ORDERS OR DIRECTIONS and in particularly WRIT OF CERTIORARIFIED MANDAMUS to call for the records in Impugned order in Na.Ka.01/2017/C1 dated 11.03.2024 passed by the 2nd respondent and quash the same and consequently direct the respondents and more specifically to the 1st respondent to pay compensation of Rs. 20,00,000/- to the petitioner and pass such other further order or orders as this Hon'ble Court may deem fit and proper in the circumstances of the case, Award cost and thus render justice".
4.2. நீதிபதி D. பாரத சக்கரவர்த்தி விசாரணை & உத்தரவு (Hearing & Order)

10.02.2025 அன்று இவ்வழக்கு மாண்புமிகு நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி. விஜேந்திரன் வாதாடி, அரசின் நிர்வாகத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 'Writ of Certiorari' தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அசல் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து ஆய்வு செய்ய வேண்டியதன் சட்டத் தேவையை வலியுறுத்தினார். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜரானார்.
ஆனால், அசல் ஆவணங்களைக் கோரி ஆய்வுக்கு உட்படுத்தாமல், முதல் நிலையிலேயே (in limine) மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பின் பத்திகள் 4 மற்றும் 5:
"4. Mr.P.Vijendran, the learned counsel appearing on behalf of the petitioner would submit that now, by the impugned order, the very death certificate issued to the father of the petitioner is being disputed. It is stated that the entry with reference to the death certificate itself is unfounded, as per the village records, there was no such serial number 18. Therefore, now the question is again writ large as to whether his father is alive or not and even when the death entry is disputed by the Government, the entire issue has to be thoroughly investigated. The date of death and the cause of death, if any, of the petitioner's father have to be investigated. If his father died due to custodial violence, then the petitioner will be entitled for compensation. In any event, the impugned order is liable to be interfered with by this Court, as when the petitioner has claimed compensation, while denying the same, there is not even any positive finding as to whether the petitioner's father is alive or dead and if so, whether his death was natural or due to any custodial violence by the police.

5. Mr. Stalin Abimanyu, the learned Additional Government Pleader appearing on behalf the first and second respondents would submit that such an enquiry cannot be made now after 30 years of the alleged death of the said Arjunan. It would not lead the authorities anywhere. It is not the specific allegation of the petitioner that the said Arjunan died only due to custodial torture. No complaint was ever registered and now after 30 years, these questions cannot be gone into, only for the purpose of deciding compensation".
நீதிபதி தனது உத்தரவில் (https://mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/1194058) பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"This Court can empathise with the petitioner, being the legal heir of the said Arjunan. However, there is something called the future and it is time to move on".
நீதிபதி தெரிவித்த இந்த உதிரி கருத்து, பொய்மையாலும் வெற்று அனுதாபத்தாலும் நிரம்பிய ஒன்றாகும். இது, பண்டைக்காலத்தில் அரசியல்வாதி ஒருவர் கூடுதல் தொகுதி கேட்டபோது முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் கிண்டலாகத் தெரிவித்த "மனதில் இடமிருக்கிறது" என்ற அரசியல் கருத்துக்கு ஒப்பான போலி அனுதாப வெளிப்பாடேயாகும்.
4.3. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் ஒப்பிடு (Sita Ram Case)
நீதிமன்றங்கள் சட்டத்திற்கு விளக்கமளிக்கும் போது நீதிபதிகளின் இதயமும் சிந்தனையும் இணைந்து செயலாற்ற வேண்டும் (The Heart and the Head interact and interpret) என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் Sita Ram & Others -Vs- State of U.P, 1979 (2) SCC, Page 646 Para 2 (https://indiankanoon.org/doc/1083066/) வழக்கில் வழிகாட்டியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் நீதிபதிக்கு இதயமும் இல்லை, சிந்தனையும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே உத்தரவு அமைந்தது.
5. ரீட் மேல்முறையீடு W.A. No. 573/2025, உச்ச நீதிமன்ற நடவடிக்கை & வரலாற்று ஒப்பீடு (Writ Appeal W.A. No. 573/2025, Supreme Court Appeal & Historical Parallel)
5.1. மேல்முறையீட்டின் சட்டக் காரணங்கள் (Legal Grounds for Writ Appeal)
நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தியின் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து W.A. No. 573/2025 என்ற ரீட் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அரசிடம் அசல் ஆவணங்களைக் கோரிப் பெறாமல் முதல் நிலையிலேயே தள்ளுபடி செய்தது 'Writ of Certiorari'-யின் அடிப்படைத் தன்மைக்கே எதிரானது என்று பிரமாணப் பத்திரத்தில் முதன்மை சட்டக் காரணமாக (Ground 'a') முன்வைக்கப்பட்டது:
"a) The learned judge failed to consider that the appellant herein has filed W.P.No.4286/2025 and sought for Certiorarified Mandamus. It was taken up for hearing on 10.02.2025 and dismissed in limini without call for the records in respect of the impugned order. It is against the basic velocity [sic] of 'Writ of Certiorari'".
இக்கருத்திற்குச் சட்ட அகராதிகளிலிருந்து பின்வரும் வரைவிலக்கணங்கள் மேற்கோள் காட்டப்பட்டன:
The Law Lexicon (By P. Ramanatha Aiyar): "To call upon records of the cause therein."
Black's Law Dictionary: "To deliver the record in the case for review."
Stroud's Judicial Dictionary: "To call up the records of a cause therein depending, that conscionable justice may be therein administered."
Quotable Quotes from the Supreme Court Cases (1969-2015, Page No. 109): "Where the courts act illegally and there is on the face of the records and it should be corrected by certiorari."
5.2. மேல்முறையீட்டு அமர்வு உத்தரவு & தற்போதைய நிலை (Division Bench Order & Current Status)
மேல்முறையீடு W.A. No. 573/2025 மாண்புமிகு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீட்டாளர் அர்ஜுனன் இறந்ததற்கான முதல் பார்வைச் சான்றோ (Prima Facie evidence) சாட்சியமோ வழங்கப்படவில்லை எனக் கூறி, கீழமை உரிமையியல் நீதிமன்றத்தில் உரிய வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி மேல்முறையீட்டை முடித்து வைத்தனர் (https://mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/1200166).
இந்நிகழ்வு "குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழிதோண்டியும் புதைத்தது" என்ற தமிழ் பழமொழிக்கு முற்றிலும் இலக்கணமாக அமைந்தது. "நீதிபதியின் இருக்கையே கடவுளின் இருக்கை (Seat of Justice is Seat of God)" என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையை உணர்ந்து, சதீஷ் குமார் தனது சட்டப் போராட்டத்தைத் தளர்த்தாமல் தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of India) மேல்முறையீடு செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
5.3. வரலாற்று ஒப்பீடும் நூலடைவும் (Historical Parallel & Book Reference)
சதீஷ் குமார் வழக்கில் அரசுக் காவல் மரணத்திற்கான போதுமான ஆதாரங்களும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களும் இருந்தபோதிலும், அவருக்கு உரிய நிவாரணம் மறுக்கப்பட்டதன் பின்னணியில் நீதித்துறை முடிவெடுக்கும் முறையில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு சமூக-அரசியல் காரணிகள் இயங்கியுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்புகளும் உத்தரவுகளும் வெறும் சட்ட விதிகளின்படி மட்டும் வழங்கப்படுவதில்லை; மாறாக:
நீதிபதியின் சமூகப் பின்னணி (Social background of the judge)
அவர்களின் தனிப்பட்ட மனநிலை (Mindset / mental state)
வெளியே தெரியாமல் இருக்கும் அவரது அரசியல் கோட்பாடு (Unstated political philosophy)
வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரின் தகுதி மற்றும் ஆளுமை (Stature/competence of the advocate)
நீதிபதிகளுக்கும் வழக்கறிஞருக்குமான தனிப்பட்ட உறவுமுறை (Advocate-Judge dynamic)
வழக்கின் பருப்பொருண்மை (Material facts of the case)

ஆகிய ஆறு முக்கியமான காரணிகளைக் கடந்தே உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக, இவ்வழக்கில் 'வீரப்பன்' என்ற பெயரைக் கண்டதுமே தோன்றிவிடும் ஆழமான ஒருசார்பு மனநிலையும் (systemic bias), எதிர்மறையான எண்ண ஓட்டமுமே நீதியை மறுத்த முதன்மை காரணியாகும்.
இது, பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக் காலத்தில் ஒரே குற்றத்திற்காக இந்தியர்களுக்குக் கடுமையான தண்டனையும், வெள்ளை இனத்தவருக்கு முற்றிலும் பாரபட்சமான முறையில் விலக்களிப்பும் வழங்கிய காலனித்துவ சட்ட நீதிமுறைக்கு (Colonial Legal Order) இணையானதாகும்.
நூல் வரலாற்றுச் சான்று (Bibliographical Legal Archival Metadata):
Kolsky, Elizabeth. (2010). "Colonial Justice in British India - White Violence and the Rule of Law". Cambridge University Press. (Cambridge Studies in Indian History and Society). -வழக்கறிஞர் ப. விஜேந்திரன் அவர்கள் எழுதும் நீதியை தேடிய கதைகள் தொடரும்...

கருத்துகள் (0)
கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion
கருத்து பதிவிட உள்நுழையவும் — log in