🔴
•போக்சோ வழக்குகளில் அதிரடி தீர்ப்புகள்: வேலூர், மதுரை, தேனி, திருச்சியில் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை!•சட்டம் பாதி சண்டை மீதி•🔴 பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது: பல பெண்களுடன் தொடர்பு – மனைவியைத் தாக்கி சித்ரவதை செய்ததாக புகார்!•🔴 டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: விசாரணை முடியும் முன்பே ராஜேஷ் லக்கானி மீண்டும் மின் வாரிய இயக்குநராக நியமனம் – கடும் கண்டனம்!•🔴 இடைத்தேர்தல் முடிவுகள்: நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சரிவு – கடந்த தேர்தலை விட மோசமான நிலை! பாடம் கற்றுக்கொள்வாரா சீமான் ? கஎக கேள்வி!•🔴 கல்வி மாஃபியா அம்பலம்: ஒரே நாளில் 5 மாவட்டங்களில் ஆய்வு செய்ததாக போலி ஆவணம் – 74 கல்லூரிகளுக்கு அங்கீகாரம்; ஒரே பேராசிரியர் 11 கல்லூரிகளில் பணி!•🔴 வீரமணி போக்சோ வழக்கு: சாட்சியங்களை அழித்தல், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதா? – நீதிபதி பத்மா அதிரடி கேள்வி!•🔴 சிவகங்கை அதிர்ச்சி: காளையார்கோவில் காவல் ஆய்வாளர் காதர் மீராவுக்கு அரிவாள் வெட்டு – பொதுமக்கள் தாக்கியதில் குற்றவாளி படுகாயம்!•🔴 "இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?" – ஸ்டார்லிங்க் உரிமம் தொடர்பாக எலான் மஸ்க் அதிரடி கேள்வி!•அரசு ஊழியர்களின் சொத்து விவரப் பிரகடனம்: வெளிப்படைத்தன்மையும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளும்•போக்சோ வழக்குகளில் அதிரடி தீர்ப்புகள்: வேலூர், மதுரை, தேனி, திருச்சியில் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை!•சட்டம் பாதி சண்டை மீதி•🔴 பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது: பல பெண்களுடன் தொடர்பு – மனைவியைத் தாக்கி சித்ரவதை செய்ததாக புகார்!•🔴 டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: விசாரணை முடியும் முன்பே ராஜேஷ் லக்கானி மீண்டும் மின் வாரிய இயக்குநராக நியமனம் – கடும் கண்டனம்!•🔴 இடைத்தேர்தல் முடிவுகள்: நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சரிவு – கடந்த தேர்தலை விட மோசமான நிலை! பாடம் கற்றுக்கொள்வாரா சீமான் ? கஎக கேள்வி!•🔴 கல்வி மாஃபியா அம்பலம்: ஒரே நாளில் 5 மாவட்டங்களில் ஆய்வு செய்ததாக போலி ஆவணம் – 74 கல்லூரிகளுக்கு அங்கீகாரம்; ஒரே பேராசிரியர் 11 கல்லூரிகளில் பணி!•🔴 வீரமணி போக்சோ வழக்கு: சாட்சியங்களை அழித்தல், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதா? – நீதிபதி பத்மா அதிரடி கேள்வி!•🔴 சிவகங்கை அதிர்ச்சி: காளையார்கோவில் காவல் ஆய்வாளர் காதர் மீராவுக்கு அரிவாள் வெட்டு – பொதுமக்கள் தாக்கியதில் குற்றவாளி படுகாயம்!•🔴 "இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?" – ஸ்டார்லிங்க் உரிமம் தொடர்பாக எலான் மஸ்க் அதிரடி கேள்வி!•அரசு ஊழியர்களின் சொத்து விவரப் பிரகடனம்: வெளிப்படைத்தன்மையும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளும்
KARUPPU NEWS
சட்டம் பாதி சண்டை மீதி
வழக்குகள்LIVE

சட்டம் பாதி சண்டை மீதி

வழக்கறிஞராகத் தொழில் தொடங்கிய காலத்தில், நீடாமங்கலம் காவல் துறையினரால் அநீதிக்கு ஆளான தோழர் தமிழார்வனைக் காப்பாற்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மற்றும் குண்டாஸ் சட்டத்தை எதிர்த்து நடத்திய உண்மைச் சட்டப் போராட்டத்தின் விறுவிறுப்பான பதிவு.

சிறப்பு சட்டத் தொடர்

நீதியை தேடிய கதைகள்பகுதி 1
வ

தொடர் ஆசிரியர்

வசந்தபிரியன்🟤

Published

9 Oct 2026

சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பு

Updated

9 Oct 2026

3 நிமிடம்Editorial Policy
1
“உலக மக்களின் முன்னோடியாக இருப்பவன் எப்பொழுதும் அமைப்பிற்கு
முரணானவன் என்றே அழைக்கப்படுகிறான்”

என்றார் மாபெரும் வழக்கறிஞர் ராபர்ட் இங்கர்சால். அந்த முரணானவர்களில் முன்னோடிகள் தான் மாமனிதர் வி.ஆர் கிருஷ்ணய்யர் அவர்கள்.

வி.ஆர் கிருஷ்ணய்யர்

அதனால் தான் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டபோது வழக்கறிஞர் நானி பல்திவாலா போன்றோர் அவரை எதிர்த்தார்கள். அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக அரசியல் அமைப்பு சட்டத்தை குலைத்து விடுவார் என்றார்கள் ஆனால் மாறாக எழுத்து வடிவில் இருந்த அரசியலமைப்புச் சட்டத்தை
எழுந்து நடை போட செய்தவர்களில் முதல் நபர் அவர்தான். அவருடைய
எழுத்துக்களையும் தீர்ப்புகளையும் படிக்கும் போது உணர்வு மட்டுமல்ல ஆற்றலும் உருவாகும். அந்த ஆற்றலாலும் இடதுசாரி துணிச்சலாலும் ஒடுக்கப்பட்டோரின்
உரிமைகளுக்காக நடத்திய ஒரு சில வழக்குகளில் எப்படி தீர்ப்புகள் வெளிவந்தன என்பதை பதிவு செய்வதே இந்த எழுத்தின் நோக்கம்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனங்களில் நீதித்துறையில் மட்டும்தான் சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் உள்ளது அதனால் தான் இந்த சமூகத்தின் சாதி போன்ற பிற்போக்கு குணாதிசயங்கள் மாறாமல் உள்ளது. எனவேதான் இந்திய
அரசியலமைப்புச் சட்ட நோக்கப்படி சமூகம் சோசியலிச சமூகமாக மாறாமல் உள்ளது.

இதைப் புரிந்து கொள்வதும் புனரமைப்பதும் என்ற எண்ணத்தில் நடத்திய வழக்குகளின் சிறு தொகுப்பே இது. "
ஒரே ஒரு ஒடுக்கப்பட்ட இளம் வழக்கறிஞருக்கு ஒரு சிறு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நான் எண்ணியவற்றிற்கு பலன் உண்டு".

என்னுடைய தொழிலை மூத்த வழக்கறிஞரிடமிருந்து தனியாக தொடங்கிய காலம். அதாவது 1998 இளம் வழக்கறிஞராக சேர்ந்து மூன்று ஆண்டு காலம் சீனியரிடமிருந்து 2001 இல் தனியே வந்தேன். இது ஒரு பிரசவத்திற்கு சமமானது.இந்த நிலையில் வாழ்வும் தொழிலும் கேள்விக்குறியாகவே இருக்கும். அதுவும் உயர் நீதிமன்றத்தில். மேலும் சாதாரண கிராமப்புறத்தில் இருந்து தமிழ் வழிக்கல்வியில் படித்து வரும் இளம் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது பெரிய சவால் நிறைந்தது. இந்த நேரத்தில்தான் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தோழர் தமிழார்வன் என்பவர் என்னை அணுகினார். அவர் முதுநிலை பட்டதாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத்தின்

தோழர் ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன்

முன்னால் தலைவர் ஆவார் அவர் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதை
எதிர்த்து வழக்கு போட வேண்டும் எனவும் கூறினார் இந்த வழக்கு தொடர்பாக ஆட்கொணர்வு வழக்குகளில் ஜாம்பவான்கள் எல்லோரும் 'நீங்கள் உள்ளே போனால் தான் வழக்கு போட முடியும்' என்று கூறியதாகவும் கூறி கிலியை உண்டு பண்ணினார் குறிப்பாக
) தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாபெரும் கம்யூனிச, பெரியாரியப் போராளி மற்றும் விவசாய சங்கத் தலைவரும், பண்ணையார்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும், ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாகப் போராடிய மரியாதைக்குரிய தோழர் ஏ.ஜி.கே. (AGK) என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன் என்னை சந்திக்கு வழக்கை கொடுக்க பரிந்துரை செய்ததாக கூறினார், நான் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தேன்.

“அந்த நபர் நான் அல்ல; என் தம்பி மீது தான் தடுப்பு காவல் ஆணை
போடப்பட்டுள்ளது என் தம்பி சிபிஐ-ல் உள்ளார். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்.
கட்சி வேலையிலும் பொது பிரச்சனைகளிலும் தீவிரமாக வேலை செய்வதால்
நீடாமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தேவன் (அவர் சாதியும் தேவர்) என் தம்பியை தடுப்பு காவல் ஆணை பிறப்பித்து கைது செய்து சுட்டுக்கொன்று விட்டு ஓடி
விட்டதாக நாடகமாடுகிறார்
” என்றார். சாதாரண நேரத்திலேயே சட்டென்று கோபப்படும் எனக்கு அவர் கூறிய தகவல்கள் கனலை விழுங்கியது போன்ற உணர்வு பிறட்டது நிதானித்துக் கொண்டு மேலும் கேட்டேன். இறுதி முடிவு தடுப்பு காவல் ஆணையை எதிர்த்து வழக்கு போடுவதற்கு முன் உரிய நபர் உயிரோடு இருக்கிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அதற்கு முதலில் சட்டம் சாரா ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஒன்றை அண்ணன் சேகர் பேரில் தாக்கல்
செய்தோம். மனோ
HCP.No.656/2003 நீதிபதிகள் சிர்புர்கார் மற்றும் தணிகாசலம் ஆகியோர் கொண்ட அமர்வில் வந்தது. நீதிபதி. வி.சர்புர்கார் மகாராஸ்டிரா மாகாணத்தை சேர்ந்த சிற்பவன பார்ப்பனர் தணிகாசலம் பிரபல சாமியாரின் உறவினரும் வட மாவட்ட வன்னியர் சாதி. நல்ல சேர்க்கை. வழக்கின் கதாநாயகன் இடதுசாரி கோட்பாட்டால் ஈற்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தவர் எப்படி இருக்கும் என்பதை உணர்கின்றவர்களுக்கு மட்டுமே புரியும்.

பூனைகளிடம் எலி நீதி கேட்க முடியுமா?
நீதிபதி. வி. சிர்புர்கார் சீறினார் அந்த நபர் தப்பித்து விட்டதாகவும்: பொய்யாக வழக்கு போட்டு இருப்பதாகவும்; நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகவும் கூறினார். எனக்கோ என் புரட்சிக்காரனை கொன்று விட்டானே தேவன் என்ற கோபத்தில் இருக்கிறேன். நீதிபதி. வி.சிர்புர்கார் அந்த நேரத்தில் பேசியது என்னை தீப்பிடிக்க வைத்தது. என்னுடைய எண்ணத்தை தெளிவாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அந்த இயலாமையின் கோபமாக மாறியது. உடனே டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களே உதவி செய்தன அவரின் கீழ்க்கண்ட வரிகளை வாசித்தேன்.

“தீண்டப்படாதவர்களை காலை வாரி விடுவதில் பெரும்பாலான

சந்தர்ப்பங்களில் இந்துக்கள் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு பல காரணங்கள்
உண்டு. காவல்துறையும் குற்றவியல் துறையும் இந்துவின் பக்கமே இருக்கின்றன.
தீண்டப்படாதவருக்கும் இந்துக்களுக்கும் இடையே நடைபெறும் சச்சரவில்
தீண்டப்படாதவர் காவல்துறையிடம் இருந்து பாதுகாப்பையும் நீதி துறையில் இருந்து
நீதியையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது காவல்துறையினரும் நீதித்துறைகளும்
இந்துக்கள் அவர்கள் தங்கள் கடமையை விட தங்கள் இனத்தையே பெரிதும்
நேசிக்கின்றனர். ”

- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு (இந்திய அரசின் பதிப்பு)
தொகுதி -17 பக்கம்-39


நீதிபதி. வி.சர்புர்காருக்கு தமிழ் புரியவில்லை. உடனே சக நீதிபதி தணிகாசலம் அவருக்கு மொழிபெயர்த்து அவரிடம் கூறினார். உடனே பதிறினார்நீதிபதி. சிர்புர்கார் என் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுப்பதாக சீறினார் நான் எடுங்கள் என்றேன். அப்பொழுதுதான் மூத்த வழக்கறிஞர்கள் அடிபுல்லா பாஷா எழுந்து நீதிபதிகளிடம் இளம் வழக்கறிஞர்... ஏதோ நடந்திருக்கிறது. அதனால்தான் கோபப்படுகிறார் நீங்கள் பதில் போட சொல்லுங்கள் எனக் கூறினார். நீதிபதிகளும் அதை ஏற்றுக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை பதில் போடுமாறு கூறினார் நானும் காப்பாற்றப்பட்டேன் அன்று.

Madras- around the year 1900; "Majestic view of High Court building, across railway tracks"
Madras High Court building around 1900


அதே வழக்கு ஒரு வாரம் கழித்து நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு மற்றும்
தணிகாசலம் ஆகியோர் கொண்ட அமர்வில் வந்தது. அன்று இன்ஸ்பெக்டர் தேவன்
பதில் உரை தாக்கல் செய்தார் அதில் தமிழார்வனுக்கு தடுப்பு காவல் செய்து குரு ஹோட்டல் முன்பு தப்பித்து ஓடிவிட்டதாக எழுதி இருந்தார் நான்
“அவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பித்து விட்டதாக கூறுகிறார்” என்று கத்தினேன்
அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் உடனிருந்தார்
[அப்போதைய ஆளுங்கட்சியின் (அதிமுக) விருப்பப்படி தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த நேரம். ]

நீதிபதி ஜெயசிம்ம பாபு

நெற்றியில் பட்டையுடனும் கட்டப்பட்ட கைகளோடும் அமைதியாக நின்றிருந்தார் நீதிபதி ஜெயசிம்ம பாபு "என் காட்டுக் கத்தல்களை கேட்டதும், ஏதோ நடந்துள்ளது, அதாவது கைதியை சுட்டுக் கொன்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதினார் எனவே இந்த சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்தார்

ஒரு வாரம் கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி பதிலுறை தாக்கல் செய்தார். இதில் கைதி தமிழார்வன் திருச்சி மத்திய சிறைக்கு செல்லும் வழியில் இயற்கை உபாதையாக உள்ளதென சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார் இன்ஸ்பெக்டர் தேவன் தாக்கல் செய்த வாக்குமூலத்துக்கும், கண்காணிப்பாளர் தாக்கல் செய்த வாக்குமூலத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் கைதி தப்பி ஓடவில்லை. அவரை கொன்றதை மறைக்கத்தான் இப்படி
நடந்து கொள்கிறார்கள் என்று எனக்்கே உரிய தொனியில் சத்தமிட்டேன். நீதிபதி.ஜெயசிம்ம பாபு கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு “யார் சொல்வது சரி? உங்கள்வாக்குமூலம் சரியானதா? மாவட்ட கண்காணிப்பாளர் சொல்வது சரியானதா? என்று கடுமையான தொனியில் கரகரப்பான குரலில் கேட்டார்.

இன்ஸ்பெக்டர் தேவன் கைகளை மடக்கி "நான் சொன்னது தப்பு, எஸ்பி சொன்னது சரி" என்று தயங்கிய குரலில் சொன்னார். உடனே, நீதிபதி ஜெயசிம்மபாபு, 2.15க்கு வழக்கை அழைப்பதாகக் கூறிவிட்டு (Passover), "தேவன் சொன்னதைக் அப்படியே அஃபிடவிட்டாக போடச்சொன்னார்” . இன்ஸ்பெக்டர் தேவன் முகத்தில் ஈ ஆடவில்லை. கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நவநீதகிருஷ்ணனிடம் ஆலோசித்து, மீண்டும் 2.15 மணிக்கு அமர்வு அமர்ந்த போது ஆணையுறுதியுரையை தாக்கல் செய்தார் இறுதியில் குறிப்பிட்ட பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“I have wrongly stated that the accused was escaped from the custody of police. Bu this was neither wilfull nor wanton, it is purely because of fear. I have falsely stated in my counter affidavit that the accused Tamilarvan was escaped from the police custody on 26.03.2003 at 5.00pm.”

பாதிக்கபட்ட தமிழார்வன்

இந்த ஆணையுறுதியுரையை இறுதிவரை படித்த உடனே “YES, CALL THE
REGISTRAR” என்றார் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே நீதிமன்ற
அலுவலர் சென்று பதிவாளரை அழைத்து வந்தார். மூன்றாவது நீதிமன்றமும்
பதிவாளர் அறையும் அருகில் என்பதால் 5 மணித்துளிகளில் பதிவாளர்
வந்துவிட்டார் உடனே நீதிபதி ஜெயசிம்ம பாபு பதிவாளரை பார்த்து "REMOVE HIS
SHIRT" என்றார் அதாவது இன்ஸ்பெக்டர் தேவனின் சட்டையை களட்டச்
சொன்னார். காரணம், பொய்யாக நீதிமன்றத்தில் ஆணையுறுதியுரை தாக்கல்
செய்ததற்காக. தேவன் கதறினார். திறந்த நீதிமன்றத்தில் நெடுஞ்சாங்கடையாக
காலில் விழுந்தார் நீதிபதிகள் மனமிறங்கவில்லை. தேவனை கைது செய்ய சொன்னார்கள். அப்பொழுது நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் திகைத்து
விட்டனர் நீதிபதிகள் ஜெயசிம்ம பாபுவும் சிங்காரவேலும் தேவனுக்கு எதிராக
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தன்னிச்சையாக(Su-Moto) எடுத்தார்கள்.
Cont.P.No.634/2003. https://www.casemine.com/judgement/in/56090169e4b01497111568af

அதன்பிறகு வழக்கு முடிவுற்று நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தேன். முத்துச்சாமி ஐயர் சிலைக்கு அருகில் நான் வந்தபோது, தேவன் ஓடி வந்து என்னிடம் “காலில் கூட விழுகிறேன் என்னை காப்பாற்றுங்கள்” என்றார் நான் என்ன இயேசுவா ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுக்கண்ணத்தை காண்பிக்க.

அதன்பின், நான் தேவனிடம் “ஏண்டா! பறையன்.... பள்ளன்...னா அவ்வளவு கேவலமா போச்சு உங்களுக்கு... போடா உனக்கு இன்னும் இருக்கு...” என்று என்னுடைய வெறி தீர சொன்னேன்.

எனவே வழக்கு ஆட்கொணர்வு மனு ஒன்றாகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றாகவும் நடந்தது ஆட்கொணர்வு மனுவை நீதிபதி வி. எஸ். சிர்புர்காரும் ஏ ஆர் ராமலிங்கமும் தமிழார்வன் தலைமறைவாக இருப்பதாகவும் அப்படி உண்மையிலேயே மனுதாரர் வழக்கறிஞர் கூறுவது போல் இறந்திருந்தாலோ காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டிருந்தாலோ அதை எதிர்த்து வழக்கு தொடுக்க உரிமை அளித்து 07.10.2003 அன்று வழக்கை முடித்து வைத்தனர் இதுதான் ஒரு உயிரின் மீது நீதிமன்றம் காட்டும் அக்கறை போலும். இதுதான் அந்த உத்தரவு.
HCP No.656/2003 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தமிழார்வனை காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டம் தொடங்கிய பிறகுதான், தடுப்புக்காவல் ஆணையை எதிர்த்து 2008 (16) SCC 14, Deepak Bajaj vs State Of Maharashtra & Anr on 12 November, 2008
https://indiankanoon.org/docfragment/681866/?big=3&formInput=deepak+bajaj+vs+state+of+maharashtra

என்ற வழக்கின் அடிப்படையில் மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த வழக்கை வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்ய முடிவு செய்ததால் வழக்கின் முழு விவரங்களையும், தேவையான ஆவணங்களையும், சட்டப்பூர்வமான காரணங்களையும் எனது அலுவலகத்திலேயே தயார் செய்து தோழர். திரு. திரு. சங்கரசுப்பு அவர்களின் தலைமையில் நீ. பே. எண்.4993/2003 என்றவழக்கு தமிழார்வன் மீது பிறப்பிக்கப்பட்ட Goondas Act தடுப்புக்காவல் ஆணை
C.O.C.No.2/2003, dated 24.02.2003-ஐ ரத்து செய்ய வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கபட்ட மக்களுடன் ப. விஜேந்திரன் அவர்கள் Credit: karuppu.in · © Karuppu Ezhutthu Kazhagam · Chennai · Chennai

முதல் விசாரணையிலேயே அந்த வழக்கு நீதிபதி ரவிராஜபாண்டியன்
அவர்கள் முன்பு வந்தது. இங்கேதான் இந்த வழக்கின் இன்னொரு அத்தியாயம்
தொடங்குகிறது. நான் அன்றைய அனுபவத்தின் அடிப்படையில் சட்டத்தின் எந்தப்
பிரிவைச் சொல்ல வேண்டும் என்பதைக் காட்டிலும், இந்த வழக்கில் உள்ள சாதியப்
பின்னணியைச் சொன்னால் மட்டுமே இந்த நீதிமன்றத்தின் கவனம் கிடைக்கும்
எனக் கருதி வழக்கறிஞர் திரு. சங்கரசுப்புவிடம், வழக்கின் சாதியப் பின்னணியை வெளிப்படையாக நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு அவர்தயங்கி பிறகு ஒப்புக்கொண்டு “MAY IT PLEASE YOUR LORDSHIP, THIS IS A DISPUTE BETWEEN THE KALLA AND PARAIYA.” என்று மட்டுமே கூறினார்.

இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, “வழக்கின் சட்டப்பிரிவுகள்

வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு


என்ன? தடுப்புக்காவல் ஆணையில் என்ன குறை? detention order-ல் application of mind இருக்கிறதா? procedural safeguards பின்பற்றப்பட்டுள்ளனவா? என்னென்ன constitutional grounds இருக்கின்றன? இவற்றைப் பற்றிய சட்ட வாதங்கள்
பேசப்படுவதற்கு முன்பே, சாதியச் சொற்றொடர் நீதிமன்றத்தின் கதவைத் திறந்தது. வழக்கு admit செய்யப்பட்டது. எதிர்மனுதாரர்களுக்கு notice பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை ஒரு தனிப்பட்ட அனுபவமாக மட்டும் பார்க்காமல் இந்த சமூகத்திடம் பதிவு செய்ய வேண்டிய கேள்வியாகவே பார்க்கிறேன்.
• ஒரு வழக்கின் மூலம் எந்தெந்தச் சாதியைச் சேர்ந்தோருக்கு இடையே எழுகிறது
என்பதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் கதவைத் திறக்கவோ மூடவோ கூடுமா?
• சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே?
• அப்படியானால், நீதிமன்றத்தின் முன் ஒரு வழக்கின் எடை அதன் சட்டப்பூர்வமான
காரணங்களால் தீர்மானிக்கப்பட வேண்டுமா, அல்லது அதில் நிற்கும் மனிதர்களின்
சாதிப் பெயர்களால் தீர்மானிக்கப்பட வேண்டுமா?

நான் இந்தக் கேள்வியை எழுப்புவதற்குக் காரணம், ஒரு புத்தகத்தில் படித்த கோட்பாடு அல்ல. நான் நேரில் சந்தித்த ஒரு அனுபவம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நீதிமன்றத்தை சமத்துவத்தின் இடமாக உருவாக்குகிறது. ஆனால் சமூகத்தின் சாதிய மனப்பான்மை நீதிமன்றத்தின் வாசலைத் தாண்டி உள்ளே வந்து விட்டால், சாதாரண மனிதன் எங்கே போய் நீதி கேட்பான்?

சாதி தெருவில் இருக்கிறது என்று சொல்வது மட்டும் போதாது.
சாதி காவல் நிலையத்தில் இருக்கிறது.
சாதி நிர்வாகத்தில் இருக்கிறது.
சாதி அரசியலில் இருக்கிறது.

ஆனால் சாதி நீதியை வழங்க வேண்டிய இடத்திலும் தனது தாக்கத்தை செலுத்துகிறது என்ற நிலை ஏற்பட்டால் அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா?

எனது நோக்கம் எந்த ஒரு தனிநபரையும் குறிவைத்து அவதூறு செய்வது அல்ல. நான் எதிர்கொண்டு பார்த்த ஒரு சமூக உண்மையை மறைக்காமல் பதிவு செய்வதே. ஒரு வழக்கில் சட்ட ஆதாரங்களைக் காட்டிலும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சாதிய அடையாளம் முதலில் கவனிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அது நீதிபரிபாலன முறையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
நீதிமன்றம் என்பது சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் சாதிப் பாகுபாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கக் கூடாது. அது அந்தப் பாகுபாடுகளை உடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கனவு.

அந்தக் கனவு நீதிமன்றத்தின் கதவுக்குள்ளேயே சிதைக்கப்படுகிறதா என்ற கேள்விதான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு இவை எதுவும் பெரிய கோட்பாடாகத் தெரியவில்லை. "எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று. தமிழார்வன் நல்ல மனிதர் அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்பது எனக்கு அவனை காப்பாற்ற வேண்டிய காரணமாக இருக்கவில்லை. அவன் ஒரு மனிதன்.அவன் மீது அரசு தடுப்புக்காவல் நடவடிக்கை எடுத்திருந்தது. அவனுடைய சுதந்திரத்தைப் பறித்திருந்தது. அவனை காப்பாற்ற சட்டம் அனுமதிக்கும் எந்த வழியும் இருந்தாலும் அந்த வழியைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எனது நோக்கம்".

அதனால்தான் முதலில் HCP No.656/2003 தாக்கல் செய்து அதற்குப் பிறகு கிடைத்த சட்ட வாய்ப்புகளின் வழியாக
C.O.C.No.2/2003-ஐ தாக்கல் செய்யப்பட்டது.எங்களால் முடிந்த ஒவ்வொரு சட்ட வழியும் முயற்சியும் செய்யப்பட்டது.

எங்களுடைய போராட்டம் சாதிக்காக அல்ல. ஒரு மனிதனை காப்பாற்றுவதற்காக. ஆனால் அந்த மனிதனை காப்பாற்ற முயன்றபோது, நீதியின் பாதையிலேயே சாதியின் நிழல் இருப்பது ஒழிக்கப்பட வேண்டியது. அந்த நிழலைத்தான் இந்த எழுத்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “Nothing has survived” என்று கூறப்பட்டு, வழக்கு infructuous ஆகிவிட்டதாக முடிக்கப்பட்டது.

ஒரு மனிதனை காப்பாற்றுவதற்காக நாம் நீதிமன்றத்தின் கதவைத் திறக்க போராடினோம். கதவு திறந்தது. ஆனால் அந்த நேரத்திற்குள் வழக்கின் உயிரே முடிந்துவிட்டதாக நீதிமன்றம் கூறியது. ஆனால் அந்த வழக்கு எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு போகவில்லை. நீதிமன்றத்தில் சட்டம் மட்டும் பேசப்படுவதில்லை; சமூகமும் சில நேரங்களில் பேசுகிறது. அந்த சமூகத்தில் சாதியின் குரல் நீதியின் குரலை விட சத்தமாக மாறிவிடக்கூடாது.
அதற்காகத்தான் இந்த எழுத்து.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பொறுத்தவரை இன்ஸ்பெக்டர் தேவன் தொடர்ச்சியாக நீதிபதி. ஜெயசிம்ம பாபு அவர் முன்பாக ஆஜராகி கொண்டிருந்தார். ஏனென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொருத்தவரை அந்தந்த நீதிபதிகள் முன்பே வழக்கு வரும். நீதிபதி ஜெயசிம்ம பாபு பதவிக்காலம் முடிந்த பிறகு தேவன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி எம் கற்பக விநாயகம் மற்றும் சிங்காரவேலன் அகியோர் அமர்வில் வந்தது. அவர் பல வாய்தாக்கள் தேவனை
பேசியே உளவியல் ரீதியாக உருக்குலைத்தார் இறுதியில் தேவன் மீது எடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிருபனம் ஆகிறது என்று முடிவு செய்து ரூ. 2000 அபராதமும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டதாக அறிகிறேன்.இதனால் அவரை வேலையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்தார்கள் எனவே அவருக்கு கிடைக்க வேண்டிய துணை கண்காணிப்பாளர் பதவி கிடைக்கவில்லை.

ஓய்வு பெறும் நாள் வரை தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய முடியவில்லை தேவன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார் கடைசியில் மன்னார்குடி அரசியல்வாதிகள் மூலம் சரி செய்ததாக கேள்விப்பட்டேன். ஒடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ஓரளவாவது வேலை செய்தால் சட்டத்தின் பலனை சாமானியனுக்கு கொடுக்கலாம்; சாதிய மனப்பான்மைக்கு சவுக்கடியும்
கொடுக்கலாம்;

ப. விஜேந்திரன் -நீதியை தேடிய கதைகள் தொடரும்

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

Sources / ஆதாரங்கள்

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

1WATG