🔴
சேலம்: போலி சாமியார் POCSO வழக்கில் கைது – லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல்நவோதயா பள்ளிகள்: "எங்களுக்கு தேவையில்லை" – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்பள்ளி கல்வித்துறையை உலுக்கும் 100 கோடி ஊழல்: அமைச்சர் அன்பில் மகேஷை வளைக்கும் ஆதாரங்கள் - அதிரும் புலனாய்வு அறிக்கைநக்கீரன் பிரகாஷ் மற்றும் அருண் IPS தொடர்பான வாராகியின் புகார்கள்: ஒரு விரிவான புலனாய்வு அறிக்கை🔴 வீரமணி போக்சோ வழக்கு: சிறுமி அடையாளம் காணப்பட்டார் – மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடங்கள் குறித்து விசாரணை!🔴 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி: பிரதமர் அலுவலகமே அதிகாரம் – டோப்டி இணைச் செயலாளர் விளக்கம்!தாமோதரன் பிரகாஷ் கைது: "கொஞ்ச, நஞ்ச பேச்சா பேசுன" – சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்!🔴 அன்பில் மகேஸ் வீட்டில் 9 இடங்களில் சோதனை: 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள் பறிமுதல் – கைது நெருங்குகிறது?காலம் வரும்; வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுப்பேன்" – சோதனைக்குப் பின் அன்பில் மகேஸ் அதிரடி பேட்டி! என் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பின்னால் யார், யார் இருக்கிறார்கள் என்று தெரியும்" – 8 மணி நேர சோதனைக்குப் பின் காட்டமான பதிலளித்த முன்னாள் அமைச்சர்🔴 தாம்பரம் டெண்டர் ஊழல்: அறப்போர் இயக்கத்தின் 9 கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க முடியுமா? – “செயல்முறை குறைபாடு” எனக் கூறி மழுப்புவது ஏன் ?சேலம்: போலி சாமியார் POCSO வழக்கில் கைது – லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல்நவோதயா பள்ளிகள்: "எங்களுக்கு தேவையில்லை" – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்பள்ளி கல்வித்துறையை உலுக்கும் 100 கோடி ஊழல்: அமைச்சர் அன்பில் மகேஷை வளைக்கும் ஆதாரங்கள் - அதிரும் புலனாய்வு அறிக்கைநக்கீரன் பிரகாஷ் மற்றும் அருண் IPS தொடர்பான வாராகியின் புகார்கள்: ஒரு விரிவான புலனாய்வு அறிக்கை🔴 வீரமணி போக்சோ வழக்கு: சிறுமி அடையாளம் காணப்பட்டார் – மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடங்கள் குறித்து விசாரணை!🔴 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி: பிரதமர் அலுவலகமே அதிகாரம் – டோப்டி இணைச் செயலாளர் விளக்கம்!தாமோதரன் பிரகாஷ் கைது: "கொஞ்ச, நஞ்ச பேச்சா பேசுன" – சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்!🔴 அன்பில் மகேஸ் வீட்டில் 9 இடங்களில் சோதனை: 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள் பறிமுதல் – கைது நெருங்குகிறது?காலம் வரும்; வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுப்பேன்" – சோதனைக்குப் பின் அன்பில் மகேஸ் அதிரடி பேட்டி! என் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பின்னால் யார், யார் இருக்கிறார்கள் என்று தெரியும்" – 8 மணி நேர சோதனைக்குப் பின் காட்டமான பதிலளித்த முன்னாள் அமைச்சர்🔴 தாம்பரம் டெண்டர் ஊழல்: அறப்போர் இயக்கத்தின் 9 கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க முடியுமா? – “செயல்முறை குறைபாடு” எனக் கூறி மழுப்புவது ஏன் ?
KARUPPU NEWS
சேலம்: போலி சாமியார் POCSO  வழக்கில் கைது – லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல்
குற்றம்LIVE

Advertisement

NTAXY VENDOR

சேலம்: போலி சாமியார் POCSO வழக்கில் கைது – லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல்

பரிகாரம் என்கிற பெயரில் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் எடுத்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து போலி சாமியார் விஜய் ராஜாவிடம் மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published

17 Sep 2026

சுமார் 2 மணி நேரத்தில்

Updated

17 Sep 2026

0 views3 நிமிடம்Editorial Policy
0

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே போலி சாமியாராக செயல்பட்டு வந்த விஜயராஜ் (51) என்பவர், சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வந்த நிலையில், 'சனீஸ்வரா பரிகார நிலையம்' என்ற பெயரில் போலியாக மாந்திரீக மையம் நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டு வந்த சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது. தப்பிச் சென்ற அந்தச் சிறுமி, தனது தோழிக்கு இதைத் தெரிவிக்க, அவரிடமும் இதேபோன்று நடந்துகொள்ள முயன்றதாக தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோரும் அப்பகுதி இளைஞர்களும் விஜயராஜின் பரிகார நிலையத்திற்குச் சென்று பூட்டை உடைத்து சோதனை நடத்தியபோது, அங்கு பள்ளி மாணவிகளின் சீருடைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அங்கிருந்த லேப்டாப்பை சோதனை செய்தபோது, சிறுமிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விஜயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், குறைந்தது 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், பரிகார பூஜைக்கு வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட விஜயராஜ், சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG